Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sani Peyarchi: ரிஷப ராசிக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. அள்ள அள்ள பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

sani-peyarchi-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-during-this-sani-peyarchi

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும்.

இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷபம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த சனியானது உங்களுக்கு 11 ஆவது பாவம். உப ஜெய ஸ்தானம், லாப ஸ்தானம். லாபத்தில் சனி இருப்பதால் நல்ல லாபங்கள் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கேற்ற வருமானத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சாதிப்பதற்கான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தை நன்றாகப் பயன்படுத்தினால் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஆதரவு

சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருக்கும்போது நம்முடைய மூத்த சகோதரரகள், சகோதரிகளின் சப்போர்ட் கிடைக்கும். தேவையில்லாமல் பேசி பகையை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது. நண்பர்களின் ஆதரவு உண்டாகும். எல்லோர் மீதும் அவர்கள் நல்லவர்களா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து, அதீத அன்பு வைத்து ஏமாந்து போகாமல் இருப்பது நல்லது. தாமரை இலை மேல் தண்ணீர் போல வாழக் கற்றுக் கொள்வது நல்லது.

மந்தநிலை

யாருடனும் மனதளவில் ஒட்டி உறவாடி காயப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் ஒருநாள் கூட நிம்மதி இல்லாமல் இருந்திருக்கும் காலகட்டமாக இருக்கும். மந்த நிலை, என்ன வாழ்க்கை இது என்கிற எண்ணம், எரிச்சல், கோபம் போன்றவை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும் யோகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம்

சேவை மனப்பான்மை, ஈகைத் தன்மை அதிகரிக்கும். சனி 5 ஆம் பாவத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் வந்து சேரும் யோகம் உண்டு. பிள்ளைகளால் அதீத கவலை, மன உளைச்சல், பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். இனி பிள்ளைகளால் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். சொத்து வழக்குகள் ஏதாவது இருந்தால் வழக்குகளில் சாதகம் ஏற்படும்.

100க்கு 90 மார்க்

மறைக்கப்பட்ட ரகசியங்கள், மறைக்கப்பட்ட உறவுகள் இருந்தால் அவை வெளியில் தெரிய வாய்ப்பில்லை. 9, 10க்கு அதிபதியானவர் சனி பகவான். பாக்கியாதிபதி, தொழில் ஸ்தானத்துக்கு உரியவர். 11 ஆம் பாவத்தில் சனி பகவான் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். 100 க்கு 90 சதவீதம் யோகங்கள் உண்டாகும். 12 ராசிகளில் அதிக யோகத்தைப் பெறும் ராசியினரில் ரிஷப ராசிக்காரர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+