Sani Peyarchi: கோடியில் புரளும் ரிஷப ராசி.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இதுவரை 10 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். எல்லா விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். ரிஷப ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

யோகம்
உறவினர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது, அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு தண்டுவடம், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோயில் திருப்பணிகளைச் செய்வது, கோவில் கட்டுவது போன்ற யோகங்கள் உண்டு. வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும்.
புதிய பதவி
புதிய கெளரவங்கள், புதிய பதவிகள் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். பெற்றோர், பெரியோரின் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள், கனவுகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல ஏற்றம், மாற்றம் உண்டாகும். தொழிலில் உயர்ந்த பதவி கிடைக்கும்.
மாற்றம் முன்னேற்றம்
இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் அதிக ஏற்றத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம்.
பரிகாரம்
திருப்பதி திருமலையில் ஓர் இரவு தங்குவது, கீழ் திருப்பதியில் அலமேலு தாயாரைச் சென்று வழிபாடு செய்வது, கோவிந்தராஜ பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், மகலாட்சுமி கடாட்சத்தையும் தருவது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதம்தோறும் ஒரு வெள்ளிக்கிழமையில் சிவன், பார்வதி கோயிலுக்கு அருகம்புல், வில்வம், வெள்ளைத் தாமரை கொடுப்பது உங்களுக்கு அற்புதமான மேன்மையைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications