Sani Peyarchi: அஷ்டமசனியில் சிக்கும் சிம்ம ராசி.. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் [Simmam Sani peyarchi palan]
சிம்ம ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்த சனி பகவான் தற்போது அஷ்டமசனியாக செல்கிறார். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்ல பரிகாரமாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரிதாக ஆசைப்படக் கூடாது. துணை, காதல் அமைப்பு, உங்களுக்கு நெருக்கமானவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. இல்லையெனில், தேவையில்லாத சங்கடங்களையும், பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியம்
முதுகுத்தண்டுவடம், பாதம், ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் எல்லாவற்றிலும் மாற்றங்கள் இருந்தாலும், உங்களுக்கு மன நிம்மதியைத் தரும் விஷயத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் நட்பு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது.
தடைகள் வரும்
கூடா நட்புகளால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. போதை வஸ்துகளைப் பயன்படுத்துவார்கள் கண்டிப்பாக சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளது. படிப்பு தடை, உத்தியோக தடை, வியாபார தடை, மற்றவர்களைப் பற்றி போனில், பொதுவெளியில், நம்பிக்கையானவர்கள் என யாரிடமும் புறம் பேசாமல் இருப்பது நல்லது. இப்படி பேசுவதால் தேவையில்லாமல் பெரிய ஆட்களின் பகையைச் சந்திக்கக்கூடிய வாயப்புள்ளது.
கவனம்
மிக மிக கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். தாய், தந்தையிடம், உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். நல்ல நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்வது நல்லது. நிறைய புத்தகங்களை படிக்கும் உங்களுக்கு கட்டாயம் ஏற்றம் ஏற்படும். சனி பகவான் பகை கிரகம் என்பதாலும், அஷ்டமத்தில் இருப்பதாலும் படிகளில் நடக்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
முட்டிகளில் பாதிப்புள்ளவர்கள், அடிவயிறு, சிறுநீரக பாதிப்புகள், கழிவுப் பாதை, மலக்குடல், ரத்தத்தில் பரவும் நோய் தொற்று, லிவர், கிட்னி செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும். காலஹஸ்திக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும். மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமையில் துர்க்கை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ராகு கேது வழிபாடு, கோளார் பதிகத்தை கேட்டுக் கொண்டே இருப்பது மேன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications