வார ராசி பலன்: சனி, சுக்கிரனின் பெயர்ச்சியால்.. ராஜயோகம் பெறும் 5 ராசிகள் எது தெரியுமா?
சனி, சுக்கிரன் பெயர்ச்சி 2024: நடப்பு ஆண்டின் கடைசி வாரம் துவங்குகிறது. டிசம்பர் 23 முதல் 29 வரையிலான வரும் நாட்களில் சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால், ஷஷ ராஜயோகம் உண்டாகவுள்ளது. அதே சமயம் சுக்கிரனும் கும்பத்தில் பெயர்ச்சியாகி சனி பகவானுடன் இணைகிறார். சனி, சுக்கிரனின் பெயர்ச்சியால் இந்த வாரத்தில் அதிர்ஷ்டமான யோகங்களைப் பெறும் 5 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.. (Sani Peyarchi, Sukkiran peyacrhchi)
சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் ஷஷ ராஜயோகத்தாலும், சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி சனியுடன் சேர்க்கை நடத்துவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இந்த வாரம் இருக்கும். உங்களுடைய அன்றாட வாழ்க்கையிலும், பணம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு மற்றும் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரமான டிசம்பர் 23 முதல் 29 வரையிலான காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.

ரிஷப ராசி (Rishaba rasi palan): சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமாகவும், வெற்றியைத் தரக்கூடிய வாரமாகவும் அமையும். தொழில், வியாபாரம் சார்ந்த பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இந்தப் பயணங்களால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கையில் சிறப்பான திருப்புமுனையைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்ளைத் தேடி வரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
மிதுனம் (Midhuna rasi palan): மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இந்த வாரம் அமையும். சுப காரியங்களை செய்து மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். சேமிப்புகளைத் தொடங்குவதற்கான எண்ணங்கள் தோன்றும். வேலை செய்யும் இடத்தில் நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் தடைபட்டு வந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். சமுதாயத்திலும், குடும்ப உறவுகள் மத்தியிலும் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில், கணவன் மனைவிக்குள்ளும் ஒருங்கிணைப்பு உண்டாகும்.
கடகம் (Kadaga rasi palan): கடக ராசிக்காரர்களுக்கு அமோகமான, வெற்றியைத் தரக்கூடிய வாரமாக இந்த வாரம் அமையும். தொழில், வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்து வந்த காரியங்கள் வெற்றியைத் தரும். நிம்மதியாக ஓய்வெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். திடீர் பண வரவு உண்டாகும். சொத்துகளை வாங்குவதில் முனைப்பு காட்டுவீர்கள். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பம், தொழிலில் கவனமாக கையாள்வது நல்ல பலனைத் தரும்.
துலாம் (Thulam rasi palan): துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்களையும், பண வரவையும் உண்டாக்கும். செய்யும் செயல்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் கவனமாக யோசித்து செய்வது நல்லது. சாதுர்யமாகவும், விவேகத்துடனும் செயல்பட்டு உங்களுடைய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் நல்ல அனுபவத்தைப் பெற்றுத் தரும். இதுவரை செய்து வந்த சேமிப்புகள், முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் உண்டாகும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம் (Kumba rasi palan): கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய வாரமாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வருமானத்தைக் காண்பீர்கள். பணம் தொடர்பாக இருந்து வந்த பிரச்னைகள், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முதலீடு தொடர்பான விஷயங்களில் நிபுணர்களிடம், அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெறுவது நல்லது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications