இது லிஸ்ட்லயே இல்லயே - கன்னி ராசிக்கு புத்தாண்டு பரிசு
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கன்னி ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் கன்னி ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு சனி பகவான் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு அதிபதி. அதேபோல உங்கள் கடன், நோய், பகை ஆகியவற்றுக்கும் அவர் தான் அதிபதி. தற்போது அவர் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் வக்ர கதியில் இருக்கிறார். இதன் மூலம் நீங்கள் நினைத்ததற்கு நேர் மாறான விஷயங்கள் நடந்திருக்கும். காரியங்கள் தடைகள் இருந்திருக்கும்.
வக்ர நிவர்த்தியால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வியில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். இலக்கை தெளிவாக அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்யோநியம் அதிகரிக்கும். காதல் உறவில் இனிமை கூடும். காதல் திருமணம் நடைபெறுவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உத்யோகத்தில் கடந்த காலங்களில் தடைபட்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
தொலைதூர தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும். உத்யோகம், தொழிலில் ஏராளமான மாற்றங்கள் நிகழும். பண வரவு திருப்தியாக இருக்கும். கடன் சுமை குறைந்து பொருளாதாரம் ஏற்றமடையும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கடவுளின் பரிபூரண அருளால் எல்லாவற்றிலும் மனம் நிறைவாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
நிலம், வீடு, வாகனம், ஆபரணங்கள் போன்ற அசையும் அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உண்டு. நேரம் நன்றாக இருந்தாலும் எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதறாத காரியம் சிதறாது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். வெளிநாடு, வெளி மாநில பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.












Click it and Unblock the Notifications