Dhanusu: சனி வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பண மழை கொட்டும்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தனுசு ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் கன்னி ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு கடந்த நான்கரை மாதமாக சனி வக்ரமாக மீன ராசியில் அமர்ந்திருந்தார். நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பலனைத் தரப் போகிறார். தனுசு ராசிக்கு சனி பகவான் 2க்கு உரியவர். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தின் அதிபதி. வக்ர நிலையில் இருக்கும்போது தனம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள்.
பிரச்சனைகளில் இருந்து விடுதலை
பணத்தை யாருக்காவது கொடுத்து சிக்கியிருப்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த விஷயத்திலும் சில சங்கடங்களை கொடுத்துக் கொண்டிருந்திருக்கும். குடும்பம் சார்ந்த விஷயத்திலும் பிரச்சனைகள் இதுவரை இருந்திருக்கும். கணவன், மனைவி பிரிந்திருப்பது, கருத்து வேறுபாடுகள் தோன்றுவது, பிடிவாதம், கோபத் தன்மை போன்ற எதிர்மறையான விஷயங்களை இதுவரை சந்தித்து பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இனி இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் நவம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு விடுதலை அடைவீர்கள்.
தடைகள் நீங்கும்
சனி வக்ர கதியான பிறகு தனம் சார்ந்த விஷயத்தில் இனி வலிமையாக இருப்பீர்கள். எந்த இடத்தில் எதை செய்ய வேண்டும், பொருளாதார விஷயத்தில் எப்படி நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலை, தொழில் விஷயத்தில் உங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரம், தனம், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
நினைத்தது நடக்கும்
வாக்கு சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த குறைபாடுகள் இனி நீங்கும். இனி உங்களைப் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தனம், குடும்பம், வாக்கு சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கும். நிறைய பேருக்கு அலைச்சல், டென்சன் நீங்கும். மனதில் குழப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். முயற்சி ஸ்தானத்தின் அதிபதி வக்ரமாக இருக்கும்போது நீங்கள் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறி. இனி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழில்
சகோதர வகையில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தலைவலி, ஆரோக்கிய குறைபாடுகள் எல்லாம் இனி நீங்கும். தாய் ரீதியில் சில பிரச்சனைகள் இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். அதற்கான எண்ணங்கள் தோன்றும். தொழிலில் இருந்து வந்த திருப்தியில்லாத தன்மை நீங்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் இருந்த குறைகள் நீங்கும்.
கடன் பற்றிய சிந்தனை
6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் கடன், எதிர்ப்பு, நோய், பகை ஏதாவது ஒன்றில் சிக்கிக் கொண்டிருப்பீர்கள். கடனைப் பற்றிய சிந்தனை ஓட்டங்கள் உங்களுக்கு இருக்கும். கடனை அடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications