சனி வக்ர பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு கடவுள் பாதி மிருகம் பாதி.. அதிஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வரும்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே ஒரு மாதம் சுக்கிர பகவான் உங்கள் ராசியிலேயே அமர்கிறார். ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும். காய்ச்சல், சளி, தலைவலி, உணவால் பிரச்சனை, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படுவதற்கான வாப்புள்ளது. இனிப்புகள் சாப்பிடுவதால் பிரச்சனைகள், குளிர்பானங்களை சாப்பிடுவதால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு பாதிப்பு
பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான விஷயங்கள், சுயமாரியாதை கெடுக்கும் விஷயங்கள் நடக்கும். சந்தோஷத்தை இழக்கக்கூடிய நிலமைமை ஏற்படும். உங்களுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களை வெளிப்படையாக சொல்வது நல்லது. டெக்ஸ்டைல் துறை சார்ந்த இடங்களில் இருக்கும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும். தண்ணீரில் பாதிப்பு, தண்ணீரில் கண்டம் உள்ளது.
திருமண யோகம்
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். ஜாதகத்தில் சனி வக்கிரமாக மீனம், கடம், விருச்சிகத்தில் இருந்தால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். மருத்துவர் உங்களுக்கு துணையாக கிடைக்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், கட்டுமானம், பாரம்பரிய குடும்பத்தில் இருந்து பெண் கிடைக்கும். சிவில் சர்வீஸில் இருக்கும் பெண் கிடைக்கும். பஞ்சாயத்தில் இருக்கம் பூர்வீக சொத்துகள் வந்து சேரும்.
ஆரோக்கியம், பதவி
சனி வக்கிரமாக கடகம், மீனம், விருச்சிகத்தில் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இதயம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நம்பும் நபர்களாலேயே பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, மருத்துவமனை கட்டுவது, கோயில் கட்டுவது, தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. முருகன் பெயரை வைக்கும் வாய்ப்பு ஏற்படும். நிறைய அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்கள், மருத்துமனைக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
அனைத்து விஷயங்களிலும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் கோபம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. குலதெய்வ கோயிலுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை அபிஷேகத்துக்கு கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். ஆடி மாதத்தில் எதிர்மறையான விஷயங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications