சனி வக்ர பெயர்ச்சி: 135 நாட்களில் நடக்கப் போகும் கோர சம்பவங்கள்.. இயற்கை பேரிடர் நடந்தே தீரும்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்கிர பெயர்ச்சி தொடங்கியுள்ளது. மீன ராசியில் சனி பகவான் வக்கிரமாகிறார். சனி வக்ர பெயர்ச்சி காலகட்டமான 135 நாட்களுக்கு உலகில் நடக்கப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்ரம்
ஜூலை 14 ஆம் தேதி முதல் சனி வக்ரமாகிறார். 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். சனியின் பார்வை பலமானது வக்ரப் பார்வையாக சில இடங்களை பாதிக்கிறது. திருநெல்வேலி, மதுரை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சுசீந்திரம் இந்த இடங்களில் ரயில் விபத்துகள், பாலம் கீழே விழுவது, மெடிக்கல் கல்லூரிகளில் பாதிப்பு ஏற்படுவது, விடுதிகள் இருக்கும் பகுதிகளில் பாதிப்பு, மாணவர்களை தொந்தரவு செய்வது போன்றவை ஏற்படும்.

இயற்கைப் பேரிடர்
கோவை, திருப்பூர், சென்னிமலை, ஈரோடு ஆகிய பகுதிகளில் மடாதிபதிகள், சுவாமிஜீக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். எந்த இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் அதிகளவில் உள்ளதோ அங்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். நீதிபதிகள், கோர்ட் துறைகளில் பாதிப்புகள் ஏற்படும். அடுத்த ஜனவரி வரை இந்த பாதிப்புகள் இருக்கும். நீர், நெருப்பு, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழுவதற்கான வாய்ப்புள்ளது.
முருகன் பெயர்
மணிகண்டன், சுப்பிரமணியம், கார்த்திக், வேல்முருகன் போன்ற முருகன் பெயர் கொண்ட நபர்களுக்கு மிக அதிகமான பாதிப்புகள் ஏற்படும். அல்லது பேசு பொருளாக இருப்பார்கள். சனி வக்கிரமாகும்போது மதுரையில் நிறைய பாதிப்புகள் ஏற்படும். கலவரங்கள், ஜாதிப் பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. திருநெல்வேலி சம்பந்தப்பட்ட இடங்களில் பேட்டை எனும் பெயர் கொண்ட பகுதிகளில் கண்டிப்பாக பெரிய பிரச்சனை வரும் வாய்ப்பு ஏற்படும். புரம் என்று முடியும் ஸ்தலத்தில் பிரச்சனை உண்டாகும்.
கவனம்
ரிஷபத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். அடுத்த ஒன்றரை மாதத்துக்கு ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய 3 ராசிகளுக்கு பெரிய ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகள் வரும். சிலருக்கு தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கண் பாதிப்பு, சிறுநீரகத் தொற்று, உணவினால் தொற்று போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்கள் எங்கு இருந்தாலும் மிக கவனமாக இருப்பது நல்லது.
சனியால் வரப்போகும் பாதிப்பு
ஸ்ரீபுரம் என்பது தான் திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெண்கள் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய குற்றவியல் சம்பவம் நடக்கும் வாய்ப்புள்ளது. விலையுயர்ந்த வண்டி, வாகனங்கள், புதிய கார்களுக்கு பாதிப்புகள் வரும். புதிதாக கட்டிய பாலங்களில் சமூக விரோதிகளால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. சனி வக்கிரமாகியுள்ளதால் உங்கள் ஜாதகத்தில் சனி நல்ல கதியில் இருந்தால் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கெட்டது நடக்கும். ஜாதகத்தில் சனி, குரு வக்கிரமாகவே இருந்தால் வரும் 8 மாத காலம் உங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
3 ராசிக்கு ஜாக்பாட்
மேஷம், சிம்மம், தனுசு ராசிக்கு சனி வக்கிரமாக இருந்தால் இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் என பல்வேறு அற்புதமான மாற்றங்கள் நடக்கும். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள், புதிய வண்டி வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களுக்கு சனி வக்கிரமாக இருந்தால் ரிஷபம், மகரம், கன்னி ராசிக்கு ஒன்றரை மாதத்துக்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பொற்காலம்
தொழில், வேலை, கடன் வாங்குவது, கடனை அடைப்பது, ஆரோக்கியத்தில் பிரச்சனை சரியாக வேண்டும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும் போன்றவற்றுக்கு ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக மீனம், கடகம், விருச்சிக ராசியில் இருந்தால் மிதுனம், துலாம், கும்பத்துக்கு பொற்காலமாக இருக்கும். கடகம், விருச்சிகம், மீன ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு செய்த விஷயத்தையே இரண்டு முறை செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
ஆண்களுக்கு பாதிப்பு
செவ்வாய், கேது இரண்டும் சிம்மத்தில் அமர்ந்துள்ளது. செவ்வாய் ஜூலை 28 ஆம் தேதி கன்னிக்கு வரப் போகிறார். சனி வக்கிரம் பெற்று நேரடியாக செவ்வாய் மீது விழுவதால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும். கன்னி லக்கினம், ராசிக்காரர்களுக்கு மிக அதிக பாதிப்பு ஏற்படும், ரிஷபம், மகர ராசிக்காரர்களுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
தீ விபத்து
மருத்துவமனைகளில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும். 2026 ஜனவரி மாதம் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உலகளவில் துருக்கி, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்தில் கடும் இயற்கைப் பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications