தனுசுக்கு சனியின் ஆட்டம் ஆரம்பம்.. அர்த்தாஷ்டம சனி அள்ளிக் கொடுக்குமா?.. கெடுக்குமா?

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: தனுசு ராசிக்காரர்களுக்கு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியில் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சனி பெயர்ச்சி வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம்.

sani peyarchi 2025 Sani peyarchi rasi palan

12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன. தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது எந்தவிதமான பலன்களைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசியில் பூராடம், மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றனர். பெரிய மனிதர்களுடைய தொடர்பு, வாழ்க்கையில் இலக்குகள், லட்சியங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். உங்கள் ராசியில் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் நான்காம் இடத்துக்குச் செல்கிறார். மூன்றாம் இடம் என்பது உபஜெய ஸ்தானம். நட்பு, படிப்பு, முயற்சிகள், கல்வி, சகோதரத்துவம் இதையெல்லாம் குறிக்ககூடிய ஸ்தானம். சனி பகவான் அர்த்தாஷ்டம ஸ்தானத்துக்குப் பெயரும்போது சிலர் உடல் ரீதியான பாதிப்புகளை சந்திப்பார்கள்.

ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூச்சு பிரச்சனை, நுரையீரல், முழு உடல்நலன், பயோ ஹெல்த், கண் பார்வை, அடிவயிறு பிரச்சனைகளால் சிரமப்படுவீர்கள். 4 ஆம் இடத்துக்கு செல்லும் சனியால் தாயாரை விட்டு பிரிந்து தனிக் குடித்தனம் போகக்கூடிய நிலை ஏற்படும். தாயாருடன் அதிகமாக தொடர்பு கொள்ள முடியாத சூழல் வரலாம். தாயாருக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

நான்காம் இடம் என்பது வீடு, வாகனம், மனை சம்பந்தப்பட்ட இடம். நிலம் வாங்கலாம் என்று நினைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவது நல்லது. வெளியூர் பயணத்தின்போது வேறு ஓட்டுநரை வைத்து ஓட்டுவது நல்லது. எந்த துறையில் தொழில் செய்தாலும் அமைதியாக இருப்பது நல்லது. வேலையில் தடைகள் ஏற்படும்.

வேலை, தொழிலில், விவசாயம், இரும்பு தொழில் செய்பவர்களுக்கு மந்தகரமான சூழல் ஏற்படும். துப்புரவுத் தொழில், கூலித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, கடன் தொல்லைகள், உறவினர்களால் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல ஒரு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. ஆனால், உங்களுடைய ஆரோக்கியம், வியாபாரம், வேலையில் சில இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களைத் தருவார். வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரிந்து போன கணவன், மனைவி மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக வீடு, நிலம் இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இறை பக்தி, இறை சிந்தனையுடன் இருப்பது நல்லது. சிவன் ஆலயங்களுக்குச் சென்று எள் சாதம் வழங்குவது நல்ல பலன்களைத் தரும். ஏழைகளுக்கு கருநீல வஸ்திரங்கள் தானம் செய்வது நல்லது. பைரவருக்கு நீர், உணவு கொடுப்பது பெரிய மாற்றங்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+