சசிகலாவிற்கு சாதகமற்ற கிரகங்கள்...குரு, ராகு கேது, சனியால் ஏற்படப்போகும் சங்கடங்கள்
சசிகலாவிற்கு ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, அதிசார சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்கிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். சசிகலாவிற்கு ஜென்ம குரு காலமாகும். சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். கடந்த 2017ஆம் ஆண்டு முதலே அவருக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கத் துவங்கின. இப்போது ஜென்ம குரு, குடும்ப ராகு, நிகழப்போகும் அதிசார சனிப்பெயர்ச்சி சசிகலாவிற்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சசிகலா பிறந்தது 18/08/1954. கடக லக்கினம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம். ஜெயலலிதாவின் பின்னாடியே இருந்தவர் சசிகலா. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார். விதி விடாமல் விரட்டுகிறது என்பது போல அடுத்தடுத்து நிகழ்ந்த சோக நிகழ்வுகள் சசிகலாவின் தூக்கத்தை தொலைத்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே குரு பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் சசிகலாவிற்கு சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும் ராகு கேது பெயர்ச்சியும் சுமார்தான். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். சசிகலா ஜாதகத்தில் மீனம் சந்திரன் மிதுனத்தில் குரு கேது கடகத்தில் புதன் சிம்மத்தில் லக்னம் சூரியன் கன்னியில் சுக்கிரன் துலாமில் சனி தனுசுவில் செவ்வாய் ராகு என சசிகலாவின் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ளன. அவருடைய தசாபுத்தி படி கிரகப்பெயர்ச்சிகள் எப்படி உள்ளன என்று பார்க்கலாம்.

தசாபுத்தி சரியில்லையே
சசிகலாவிற்கு செவ்வாய் திசை நடந்த போது முதல்வர் கனவில் இருந்த அவர் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குப் போனார். செவ்வாய் தசை ஆரம்பித்ததில் இருந்தே சிக்கல்தான். செவ்வாய் திசை சுக்கிரபுத்தி நடக்கும் போது சிறைக்குப் போன அவர் அடுத்தடுத்து பல சங்கடங்களை சந்தித்து வந்தார். உறவினர்களின் மரணம், கணவரின் மரணம் என பல சோக சம்பவங்கள் நடந்தன.

2017 முதல் சாதகமில்லை
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் சனிப்பெயர்ச்சி ஆனது முதலே அவருக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கத் துவங்கின. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலா ஏற்கனவே பதவிகள் இழந்து புகழ் செல்வாக்கு இழந்து சிறைக்கு போனார். 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் சாதகமற்ற நிலையே உள்ளதால் கோவில் கோவிலாக ஆன்மீக பயணம் சென்று வருகிறார்.

தினம் ஒரு பேச்சு பேசும் சசிகலா
கடந்த ஓராண்டு காலமாகவே சசிகலா தினம் ஒரு பேச்சு பேசி வருகிறார். அரசியலுக்கு வருவேன் என்றார். அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அறிக்கை விட்டார். ஆன்மீக பயணம் கிளம்பினார். அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி அதை அரசியலாக்கினார். இப்போது ஆன்மீக பயணம் அரசியல் பயணமாக மாறும் என்று கூறியுள்ளார். ஆட்சியமைத்து மக்களையும் கட்சியையும் காப்பேன் என்று கூறி வருகிறார் சசிகலா.

ராகு கேது பெயர்ச்சி
சமீபத்தில் நிகழ்ந்த ராகு கேது பெயர்ச்சி சசிகலாவிற்கு சாதகமற்ற நிலையில்தான் உள்ளது. 2ஆம் இடத்து ராகு எட்டாம் வீட்டில் கேது கால சர்ப்ப தோஷத்தில் அமர்ந்துள்ளது. நிழல் கிரகங்களின் சாதகமற்ற நிலையால் அரசியல் பயணத்தில் நிலையற்ற தன்மை ஏற்படும். கட்சியும் அதிகாரமும் கைவிட்டு போனது போனதுதான் கைப்பற்ற முடியும் என்ற வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. உறவினர்களின் ஆதரவும் சசிகலாவிற்கு இப்போதைக்கு இல்லை.

யோகங்கள் இருந்தாலும் சாதகமில்லை
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அந்த தசாபுத்தி நடைபெறும் போது பல அவமானங்களை பட வேண்டும் என்பது விதி. அதன் பலனைத்தான் சசிகலா இப்போது அனுபவிக்கிறார் என்கின்றனர் ஜோதிடர்கள். சசிகலா ஜாதகத்தில் கஜ கேசரி யோகம், முசல யோகம், உச்சம் பெற்ற சனி,குரு சண்டாள யோகம் என பல யோகங்கள் இருந்தாலும் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. சசிகலாவிற்கு குரு பெயர்ச்சி அத்தனை சாதகமாக இல்லை. இனியும் தலைமறைவு வாழ்க்கைதான்.

கோர்ட் வழக்கில் சாதகமற்ற தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று சசிகலா தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவே அவருக்கு மன சங்கடத்தை தரக்கூடியதுதான். இனி வரக்கூடிய கால கட்டங்களிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சசிகலா செய்வது சாதகமாக இருக்காது. அதிமுகவிற்கு எதிராக அவர் எதுவும் செய்ய மாட்டார். நிறைய சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஏழரை சனி எப்படி இருக்கும்
தற்போது சனிபகவான் மகர ராசியில் அமர்ந்து மீன ராசியை பார்வையிடுகிறார். மீது சனியின் பார்வை பதிவதால் நிதானமாக அடி எடுத்து வைக்கிறார். ஜென்ம குரு காலம் என்பதால் ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் நேரம் செலவிடுகிறார். அதே நேரத்தில் லாபத்தில் மகர ராசியில் உள்ள சனி இடப்பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு சென்ற பின்னர் ஏழரை சனி ஆரம்பமாகி விடும். அதுவும் சுமாரான நிலையைத்தான் தரப்போகிறது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தலைவியாக ஏற்றுக்கொள்ள கட்சி நிர்வாகிகள் தயாராக இல்லை. சசிகலாவின் ஜாதகப்படி அரசியலில் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லை. அவர் தற்சமயம் அமைதியாக இருப்பதே நல்லது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications