கடல் கடந்து உயரும் செல்வாக்கு.. அடுத்தடுத்த கிரக பெயர்ச்சியில் "விருச்சிக ராசிக்கு" யோகம்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது விருச்சிக ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். வருகிற மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது விருச்சிக ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
விருச்சிகம்: சொத்துகள் சேரும் அருமையான காலம். சொந்த வீடு கனவு நனவாக போகிறது. வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு. உங்கள் மனதுக்கு பிடித்தபடியான பைக் மற்றும் கார் உள்ளிட்ட வண்டி, வாகன மாற்றம் நிகழ போகிறது. ஆடை, நகை மாதிரியான ஆபரணங்கள் சேரும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருள்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
குழந்தை பாக்கியம்
குல தெய்வ வழிபட்டால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குல தெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் கூட இந்த காலத்தில் குல தெய்வம் அறிந்து தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஒன்றரை வருடமாக ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தார். ராகு வருகிற மே மாதம் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
வெளிநாடு யோகம்
பூர்வீக சொத்தில் இருந்து சட்ட சிக்கல்கள், இழுபறிகள் நிவர்த்தியாகும். இதன் மூலம் பூர்வீக சொத்தினால் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் கைக்கொடுக்கும். வெளிநாட்டு பயணத்தால் நல்ல யோகம் உண்டாகும். வெளிநாடுகளில் ஏற்கனவே தங்கியிருப்போர் இந்த காலத்தில் நல்ல ஏற்றம் காண்பார்கள்.
திருமணம்
வெளியூர் வேலை வாய்ப்பில் இருப்போருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இரண்டாம் அதிபதியான குரு, எட்டாம் இடத்தில் அமர்ந்து இரண்டாம் இடத்தை பார்ப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். சுப விரயங்கள் நடக்கும். நீண்ட காலமாக திருமண தடை இருந்தவர்களுக்கு அந்த தடை விலகி இந்த காலத்தில் திருமணம் நடைபெறும்.
மதிப்பு, மரியாதை
பயணங்களால் ஆதாயம் உண்டு. மருத்துவம், ஜோதிடம், சட்டம் சார்ந்த துறைகளில் இருப்போருக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள் வார்த்தைக்கு செல்வாக்கு கூடும்.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: உத்யோகம் மற்றும் தொழிலில் அவ்வப்போது பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். வீண் விரயமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உறவுகளிடையே மன கசப்புகள் ஏற்படும். எனவே கோபத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் காதல் உறவு உள்ளிட்ட விவகாரத்தில் பொறுமை முக்கியம்.
-
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications