சனியின் பார்வையில் சிக்கும் 3 ராசிக்காரர்கள்.. என்னவெல்லாம் நடக்கப் போகுதோ.. எச்சரிக்கை தேவை
சனிப்பெயர்ச்சி 2025: 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவானிடம் சிக்கிக் கொள்ளப் போகும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், எந்தெந்த ராசியினர் சனிப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர் மேலும் அவர்கள் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்காரகன், நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். பொதுவாக சனி பகவான் என்றாலே எல்லோருக்கும் அச்ச உணர்வு இருக்கும். ஆனால், சனி கிரகமானது நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்கைளையும் சமமாக கொடுக்கக் கூடியவராவார். வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்து படிப்பினைகளையும் ஏழரை சனி நடக்கும்போது நமக்கு சனி பகவான் கொடுப்பார்.
ஒன்பது கிரகங்களில் மிக வலிமையான கிரகம் என்றால் சனி பகவான் தான். ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். கிரகங்களில் ஒரு ராசியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும்தான். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.
சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவது வழக்கம். அனைத்து கிரகங்களுமே நன்மையையும் செய்யும், தீமையையும் செய்யும். அதேபோலத்தான் சனி பகவான் தீமையை மட்டுமே செய்பவர் அல்ல. நன்மையையும் அள்ளித் தரக் கூடியவர். நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். மீன ராசியில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனி பகவான் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சியில் மூன்று ராசிக்காரர்கள் சனி பகவானிடம் மாட்டிக் கொள்ளப் போகின்றனர். எந்தெந்த ராசியினர் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்.
தனுசு - தனுசு ராசிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் இருந்து சனி பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் இடமான மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கப் போகிறது. சுகத்தை கெடுக்கக்கூடிய ஸ்தானம். கட்டிலில் படுக்காமல் நிலத்தில் படுப்பது நல்லது.
வேட்டியை மட்டும் விரித்து, தலையணை கூட வைக்காமல் படுப்பது நல்லது. நில புலன், விவசாயம் செய்வோருக்கு நன்மை கிடைக்கும். இரும்பு பட்டறை வைத்திருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். கொழுப்பு சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வெளியூர் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
கன்னி - கன்னி ராசிக்கு 2023 இல் ஜனவரி மாதம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் வரும் மார்ச் 29 ஆம் தேதி 7 ஆம் வீட்டில் கண்டகச் சனியில் அமரப் போகிறார். வாழ்க்கை துணைக்கு வெளியூர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத நபர்களை விடாமல் இருப்பது நல்லது. வருமானம் விருத்தியாகும். அலைச்சல் உண்டாகும். சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
மேஷம் - 2023 ஜனவரியில் இருந்து மேஷ ராசிக்காரர்களுக்கு 11 ஆம் வீடான லாப சனியில் இருந்து வரும் சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி மேஷ ராசிக்கு 12 ஆம் வீடான விரைய சனியாகவும், ஏழரை சனியின் ஆரம்பமாகவும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அமரப் போகிறார். திருமண யோகம் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். இடமாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். பாரம்பரிய இடத்தில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். காப்பீடு நிறுவனங்கள் மூலம் பணம் கிடைக்கும். கடன்கள் கிடைக்கும்.
இந்த மூன்று ராசிக்காரர்களும் சனி பகவானுக்குரிய பரிகாரங்களைச் செய்து வருவது, சனி பகவானின் ஆலயங்களுக்குச் சென்று எள் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications