மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உச்சம்.. பணத்தில் நீச்சல் அடிக்கும் யோகம்.. வாழ்க்கையே மாறப்போகுது
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2க்குரிய சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கிறார். 2க்குரியவர் என்றால் பணம் என்று பொருள். பண விஷயம் எல்லாவற்றிலும் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரும்போது காசு, பணம், துட்டுக்கு குறைவிருக்காது. சுக்கிரன் 2 ஆம் வீட்டிற்கு வரும்போது கட்டாயமாக உங்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் வந்தே தீரும்.
யோகம்
சுக்கிரன் என்றாலே பெரும் பணம் என்று பொருள், அதனால் உங்களுக்குப் பணம் வரும்போதே பெரிய அளவில் வந்து சேரும். பங்குச் சந்தையில் போட்டுவிட்டு பணம் வரவில்லை என்று கவலைப்படவே தேவையில்லை. இனி பங்குச் சந்தையில் அதிக அளவிலான யோகத்தைப் பெறுவீர்கள். பேச்சில் இனிமை உண்டாகும். காதலை அழகாகப் புரொபோஸ் செய்வீர்கள்.
கலைஞர்களுக்கு பொற்காலம்
மிமிக்ரி ஆர்டிஸ்ட்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பட்டிமன்றப் பேச்சாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நல்ல இசை வாத்தியார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். அழகான இசைகளை அமைக்கும் வாய்ப்புள்ளது.
பணவரவு
சுக்கிர பகவானே 7க்கு உரியவர்களாகவும் இருப்பதால் மனைவியால் கிடைக்கும் வருமானம் உயரும். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உண்டாகும். அதன் மூலம் நல்ல பணவரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுக்கிர பகவானால் மிகப்பெரிய சந்தோஷமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications