துலாம் ராசிக்கு பணத்தில் புரளும் கோடீஸ்வர யோகம்.. லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

sevvai-peyarchi-thulam-libra-people-get-lots-of-good-benefits-during-this-period

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.

இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. துலாம் ராசியைப் பொருத்தவரை 11 ஆம் இடத்துக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். 11 ஆம் இடம் என்பது செல்வாக்கு, வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் மரியாதை கிடைக்கும்.

கலைத் துறையினர்

சுக்கிரன் 6 ஆம் இடத்தில் இருந்தாலும், செவ்வாய் 11 ஆம் இடத்துக்கு வருவதால் கலைத் துறையினருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி வரை ரிஷப ராசியில் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பார். உங்களுடைய வார்த்தைகள் மூலமாக வருமானம் அதிகரிக்கும். செவ்வாய், சுக்கிரன் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

தொழில்

பேச்சை தொழிலாகக் கொண்டவர்களுக்கு அதிகாரத்தோடு சேர்ந்த வார்த்தைகள், அதன் மூலமாக வருமானம் அதிகரிப்பு ஏற்படும். இனிமையான வார்த்தைகளைப் பேசி காரிய வெற்றியை ஏற்படுத்துவீர்கள். அற்புதமான மாதமாக இருக்கும். தொழில் முறையில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களைத் தேடி வந்து உங்களுடைய சேவைகளைப் பெறுவீர்கள். உங்களது முக்கியத்துவம் அதிகரிக்கும்.

லாபம் அதிகரிக்கும்

தொழில், வியாபாரத்தில் லாபம் அபரிமிதமாக இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். இரண்டாம் இடத்துக்கு தனது சொந்த வீட்டை செவ்வாய் பார்வை இருப்பதால் உங்கள் வார்த்தைகளால் நீங்கள் எதிர்பார்த்த பல்கலைக்கழகத்தில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்டகால ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

தடைகள் நீங்கும்

துலாம் ராசியைப் பொருத்தவரைக்கும் தொழில் முறையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ஓடிப்போனவனுக்கு 9 இல் குரு என்பார்கள். ஓடிப்போனவர்கள் கூட வீட்டுக்குத் திரும்பி வந்து ராஜ்ஜியத்தை ஆளும் ஆற்றலை ஏற்படுத்தும் இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி அமைத்துக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் அதிக அளவிலான நல்ல பலன்களை நீங்கள் தான் அனுபவிக்கப் போகின்றீர்கள். புதிய பொருள்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். ஆசைப்பட்டதை நடத்தக்கூடிய மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+