Sevvai Peyarchi: கன்னி ராசிக்கு அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்?
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் முயற்சி ஸ்தானத்தின் அதிபதி. செவ்வாய் வலிமையாக இருப்பதால் தைரியமாக செயல்படக்கூடிய தன்மை ஏற்படும். அளவு கடந்த துணிச்சல் இருக்கும். கோபம், ஆக்ரோஷம் அதிகளவில் இருக்கும். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்கள் உங்களை வம்பிழுந்தாலும் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நல்லதே செய்தாலும் உங்களை குறை சொல்லும் நிலை ஏற்படும்.
பேச்சில் கவனம்
நல்ல விஷயத்தை சொன்னாலும் எதிர்மறையாக கிளப்பி உங்களை கோபப்படுத்துவார்கள். பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலைச்சல்கள் இருந்து கொண்டே இருக்கும். நிலம் சார்ந்த விஷயத்தில் அனுகூலமும், ஆதாயமும் ஏற்படும். விற்பனை, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நற்பலன்களைத் தரும்.
காதல்
புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். பத்திரப் பதிவு செய்வீர்கள். இடம் வாங்குவது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் ஏற்படும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. காதலில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இல்லையெனில் அசிங்கம், அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்கள் பேச்சினால் காதலில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
விட்டுக் கொடுத்து போங்க
குழந்தைகள் வருத்தப்படுவதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளால் சிறிய அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சகோதரர்கள் மூலம் அவமானம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சகோதர சகோதரிகளுக்குள் என்னதான் நல்லது செய்தாலும் ஏதாவது ஒரு குறையை சுட்டிக் காட்டுவார்கள். செவ்வாய் உச்சமாக இருப்பதால் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
வீடு வாங்கும் யோகம்
நிலம் வீடு, வண்டி, வாகனம், அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். உடற்பயிற்சி, விளையாட்டுத் துறையில் இருக்கும் கன்னி ராசிக்கு நல்ல வளர்ச்சிகள் ஏற்படும். கட்டடம் கட்டி விற்பனை செய்பவர்கள், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல அனுகூலம் ஏற்படும். செவ்வாய் பகவான் வரும் 28 ஆம் தேதி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் அப்பாவுக்கு சில வகையில் விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
லாபங்கள் கிடைக்கும்
இந்த காலகட்டத்தில் உங்கள் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வராமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். ஜனவரி 29 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது, நல்ல லாபங்கள் கிடைக்கும். திடீர் திருமண வாய்ப்பு ஏற்படும். தாய் சார்ந்த விஷயங்களில் நற்பலன்களை அனுபவிப்பீர்கள்.
திடீர் அதிர்ஷ்டம்
நீர் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் கடல் கடந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்காத நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும். இன்ப அதிர்ச்சி, நல்ல திருப்பங்கள் உண்டாகும். பிப்ரவரி 15 முதல் செவ்வாய் அவிட்ட நட்சத்திரத்தில் பயணிப்பதால் கோபம், ஆக்ரோஷம் அதிகரிக்கும். எல்லா விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications