நெருப்பு மேல் நடப்பது போன்ற அமைப்பு.. தனுசு ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி தரும் வார்னிங்
சென்னை: தை மாதத்தில் நடைபெறவுள்ள செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த தொகுப்பில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு ஏற்படும் பலன்களை காணலாம்.
பொதுவாக செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும்போது நற்பயன்களை கொடுப்பார். பத்தாம் இடத்தில் சுமாரான பலன்களையும், 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் இருக்கும்போது சற்று பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. செவ்வாயுடன் சந்திரனின் நேர்பார்வை வரும்போதும், செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் பயணிக்கும்போதும் நீச்ச பங்க பலன் கிடைக்கும்.

செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருந்திருக்கும். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.
தனுசு ராசிக்கு செவ்வாய் சப்தம ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி தேடி உங்களைத் தேடி வரும். ஆனால் உடன் இருந்தாலும் யாரையும் நம்ப வேண்டாம். கடல் கடந்த தொடர்புகளால் ஓரளவுக்கு அணுகூலம் கிடைக்கும். இருப்பினும் அவர்களுடனும் சில நேரம் தேவையில்லாத விவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய் ஏழாம் வீட்டுக்கு வர உள்ளார். இது விரய ஸ்தானம் என்று சொல்வார்கள். அதனால் உங்களின் உடன்பிறப்புகள், குழந்தைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அவர்களிடமும் தேவையற்ற வாக்கு வாதம் காரணமாக மனஸ்தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த 82 நாட்கள் உங்களுக்கு நெருப்பு மீது நடப்பது போலத்தான் இருக்கும்.
யாரிடம் எப்போது பகை வரும் என்பது தெரியாது. உறவுகள், நண்பர்கள், எதிரிகள் என அனைவருடனும் சண்டை போடுவீர்கள். நிலம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முதலீட்டில் தாமதம் ஏற்படும். உங்களுக்கு பணம் வரவேண்டிய இடத்தில் வாங்குவதில் சிக்கல் ஏற்படும். சிலருக்கு செலவுகள் அதிகமாகவதற்கும் வாய்ப்புள்ளது.
நீண்ட காலத்துக்கு முன்னர் யாருடனாவது நீங்கள் போட்ட சண்டை தொடர்பான வழக்கு இப்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த வழக்குகளால் உங்களின் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். உத்யோகம், ஆரோக்கியம் ஆகியவற்றில் பின்னடைவு ஏற்படுத்தும். யாரைப் பற்றியும் தவறான அபிப்ராயத்தை எங்கும் வெளிப்படுத்த வேண்டாம்.
மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற பதற்றம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் கடந்து செல்வது நல்லது. உங்களுக்கு இடுப்புப் பகுதி மற்றும் சிறுநீர் தொற்று, மூலம், உஷ்ணம் ஆகியற்றால் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அது தற்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது. உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
ஆரோக்கியம் சார்ந்த செலவினம் அதிகரிக்கும். உடலில் அதிகளவு உஷ்ணம் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சார்ந்த செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீண் செலவுகளை தவிர்க்க திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். பணவரவு, வார்த்தை கட்டுப்பாடுக்கு பெருமாள் தரிசனம், விஷ்ணு சஹஸ்ரநாமம் உதவியாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications