சிம்ம ராசிக்கு செம அதிர்ஷ்டம் - நவம்பர் மாதத்தில் அடிக்குது ஜாக்பாட்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் சிம்ம ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
சிம்மம்
சிம்மம் ராசி மற்றும் சிம்மம் லக்னத்தினருக்கு உங்கள் ராசி அதிபதி சூரியன் மூன்றாம் இடத்தில் நீட்ச பங்க ராஜயோக பலனை தருவார். மேலும் அங்கு அவர் லட்சுமி நாராயண யோகத்தையும் தரப்போகிறார். இதனால் எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவியப் போகிறது. பொருளாதாரம் உயர்வடையும். சமூகத்தில் பெயர், புகழ் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம்
அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. கேது பகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். ஏராளமான சிக்கல்கள், தடைகள் வந்திருக்கும். இந்த மாதம் அந்த தடைகள் எல்லாம் உடையப் போகிறது. திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். 16 ஆம் தேதிக்கு பிறகு குரு பார்வையும் கிடைக்க போகிறது. இது அற்புதமான பலன்களை கொடுக்கும். அந்த கடவுளின் பரிபூரணமான அருள் கிடைக்கப் போகிறது,
வெற்றி
இழுபறியாக இருந்த காரியங்கள் நிவர்த்தியாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனம் தெளிவடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி நிம்மதி உருவாகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைகுனிந்த இடங்களில் தலை நிமிர்ந்து நடக்குமளவுக்கு வெற்றிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு செல்வாக்கு கூடும்.
சொத்துகள்
வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்க கூடிய அமைப்பு உள்ளது. தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகளும் குறையும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் நலன் சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அற்புதமான முடிவுகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் வளர்ச்சி உண்டு.
கவனம்
கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வபோது வீண் விரயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே நிதி மேலாண்மையில் கவனம் தேவை. யாரை நம்பியும் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகள் விஷயத்தில் மட்டும் சற்று நிதானமாக செல்ல வேண்டும். தடைகள் விலகி நற்பலன்களை பெற நரசிம்மர் கோயில் சென்று தரிசனம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications