பங்குனி மாத பலன்: சிம்மத்துக்கு கொட்டிக் கொடுக்கும் குரு, புதன்.. பண மழை கொட்டப் போகுது
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடிடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 ஆம் இடத்தில் நின்று சனி பகவானுடன் சேர்ந்து உங்களுக்கு உடல்நலக் குறைவுகளைக் கொடுத்து வந்த உங்களுடைய ராசிநாதன் சூரிய பகவான் 8 ஆவது வீட்டில் வந்து அமர்ந்திருக்கிறார். இதனால், தடைபட்ட காரியங்கள், தள்ளிப்போன விஷயங்கள் விரைவில் முடியும். புதனும் சாதகமாக இருப்பதால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். சொத்தை கொடுத்து இருக்கின்ற கடனை அடைக்கக்கூடிய முடிவுக்கு வருவீர்கள்.
குரு பகவானும் தொடர்ந்து உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். சுக்கிர பகவானும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மனைகளில் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் வரும். அதற்கான முயற்சிகள் எல்லாம் சாதகமாக முடியும்.
கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் வரும். பிறந்த வீட்டுப் பெருமை, சகோதர சகோதரிகள் குறித்த பெருமையைப் பேசாமல் இருப்பது நல்லது. காரணம் செவ்வாயும், சனி பகவானும் 7 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தைப் பொருத்தவரைக்கும் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட வேலை பார்ப்பவர்களை கொஞ்சம் தட்டிக் கொடுத்து அரவணைத்து கொண்டு போவது நல்லது. சிலருக்கு இடமாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த மாதம் முழுக்க நீங்கள் ஜெயித்துக் காட்ட நரசிம்மரை வழங்குவது நல்ல பலன்களைத் தரும். கண் பார்வையற்றவர்களுக்கு துவரம் பருப்பு தானமாக அளிப்பது நன்மை தரும் மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications