Simmam Rasi Palan: சிங்கம் போல மாறும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் துலங்கப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-that-simmam-signs-will-get-from-dec-28-to-jan-4

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு யோக பலமும், அனுகூலமும் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட பயணங்கள் அனுகூலத்தை தரும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் படிப்படியாக தீரும். துணை, காதல் அமைப்பில் அன்பு, காதல், அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

அஷ்டமசனி

அஷ்டம சனி என்று பயப்படாமல் தவறாமல் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தை தரும். அமைதியாக தியானம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மனம் தெளிவடையும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் ஏற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம்

யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக நீங்கும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் தீரும். பெரிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தும். நரம்பு, ரத்த அழுத்தம், முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். அஜீரண கோளாறுகள் தொர்பான விஷயத்தில் கவனம் தேவை. பழங்கள், எளிதாக ஜீரணமடையும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவனம்

தேவையில்லாமல் யோசிப்பது, குழம்பிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருந்து இஷ்ட தெய்வ கோயில்கள், குலதெய்வ கோயில்கள் ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவது, காரியசித்தி மாலையை கேட்பது படிப்பது ஏற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாகவும், விதிமுறைகளை மீறாமல் இருப்பதும் நன்மை பயக்கும்.

மகிழ்ச்சி

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நவக்கிரகத்தில் இருக்கம் கேது வழிபாடு உங்களுக்கு மேன்மையைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் காலகட்டம். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது நன்மையை ஏற்படுத்தி தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+