Simmam: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு.. மார்ச் மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியாதிபதியான சூரியன் 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது நல்ல அமைப்பாகும். யோகத்தை தரக்கூடிய செவ்வாய் ராசிநாதனுடன் சேர்ந்திருப்பது, ராசிநாதனுடன் தனாதிபதி, லாபாதிபதியாகிய புதனும் சேர்ந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம்.
தொட்டது துலங்கும்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மனதில் சுறுசுறுப்பு தன்னம்பிக்கை உண்டாகும். மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு கவனமாக செயல்படுவது நல்லது. ராசிநாதனாகிய சூரிய பகவான் 8 ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் மறைந்து சனி பகவானுடன் சேர்கிறது. சூரியன் சனி பகை கிரகம் என்பதால் மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெகட்டிவான விஷயங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
நிதானம் அவசியம்
மார்ச் 15 ஆம் தேதி வரை நீங்கள் நினைத்ததெல்லாம் ஜெயமாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். குரு உங்கள் ராசிநாதனைப் பார்ப்பது அற்புதமான நன்மைகளைக் கொடுக்கும். மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு எந்த விஷயங்களை செய்தாலும் யோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது. சிம்ம ராசியினருக்கு ஏற்கனவே அஷ்டமசனி நடந்து கொண்டிருப்பதால் மனம் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல் ஏற்படும்.
புத்திகூர்மை
2 ஆம் அதிபதி குடும்பம், வாக்கு, தன ஸ்தானத்தின் அதிபதியான புதன் பகவான் 7 ஆம் இடத்தில் சென்று அமர்ந்திருப்பது சிறப்பானதாகும். உங்கள் ராசியை பார்ப்பதால் சமயோஜித புத்தியைத் தரும். குருவக்கிர நிவர்த்தி அடைந்து புதனைப் பார்ப்பதால் பொருளாதார சிக்கலில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சுபகாரியங்கள்
குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கும். பணத்தைக் கையாளுகிற விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவான் பிரம்மாண்ட ஆசையை கொடுக்க வாய்ப்புள்ளதால் எந்த விஷயத்துக்கும் ஆசைப்படாமல் இருப்பது நல்லது. சூரியன் செவ்வாய் இணைந்திருப்பதால் ஆக்ரோஷத்தை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நல்லதே சொன்னாலும் அதில் குறை கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பயணம்
சுக்கிரன் 8 ஆம் இடத்தில் உச்சமாக அமர்ந்திருப்பதால் கடல் கடந்த பயணம் மேற்கொள்வீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. குழந்தைகளால் அனுகூலம் ஆதாயம் ஏற்படும். படிப்பு நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், எதிர்ப்பு, நோய் விஷயத்தில், வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
வீடு வாங்கும் யோகம்
கடனை வளர்ப்பதற்கான வாய்ப்புள்ளதால் உங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரஷர் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உஷ்ணம், கால் வலி, கிட்னி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. இடம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வண்டி, வாகனத்தில் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டாலும் நல்ல பண வரவு உண்டாகும். ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.












Click it and Unblock the Notifications