Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு சில விஷயங்களில் கவனம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், பயணம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தேவையில்லாத ரத்தபந்த உறவுகளால் மன வருத்தமும், உறவினர்களால் தேவையில்லாத சிக்கல்களும், கஷ்டங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கடன் தீரும்
உங்களுடைய துணை, பிடித்தவர்கள், பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசுவது அனுகூலத்தைத் தரும். ரத்தபந்த உறவுகளுடன் அதீத கவனமாக இருப்பது நல்லது. அவர்களுடன் தர்க்கங்கள், வாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும்.
தொழிலில் ஏற்றம்
தொழில் நிமித்தமாக ஏற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பதவி உயர்வுகள் உண்டாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் என எல்லாருக்கும் சாதகமான சூழல் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.
கவனம்
யோக பலத்தப் பெற்றுத் தரும் நல்ல காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களையும் பொறுமையாகக் கையாளுவது ஏற்றத்தை தரும். பாதம் தொடர்பான விஷயங்களில் அதீத கவனம் தேவை.
வழிபாடு
பயணங்கள், புதிய இடங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடன் பழகுபவர்கள், மேலதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்வது நன்மை பயக்கும். படுத்திருக்கும் விஷ்ணு அவதாரம், மகாலட்சுமி வழிபாடும் ஏற்றத்தைத் தரும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications