Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்
Simmam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நட்பு விஷயத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில், செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லா மற்றவர்களிடம் பேசி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆறுதல் சொன்னாலும், உத்தரவு போட்டாலும் பாதிப்புகளைச் சந்திக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அமைதியாகச் செல்வது நன்மையைத் தரும்.
முடிவுகளில் கவனம்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபம் இல்லாமல் இருக்க வேண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். ஏதாவதொரு விஷயத்தை யோசித்துக் கொண்டே இருக்காமல் இருக்க வேண்டும். தொழிலில் அவசப்பட்டு தவறான முடிவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
தகராறு வேண்டாம்
கூட்டாளிகளுடன் தகராகறு வைத்துக் கொள்ளக் கூடாது. தினந்தோறும் கோளார் பதிகத்தை கேட்பது நன்மை பயக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்களின் போது ஆண்கள், பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
தேவையில்லாமல் தெரியாதவர்களுடன் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிறர் புகழ்கிறார்கள் என்பதற்காக புகழுக்கு மயங்கி விடாமல் இருப்பது நல்லது. உறவு, நட்பு யாராக இருந்தாலும் உரிமையோடு பேசினாலும் நீங்கள் பார்த்து பேசுவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. வேகமாகச் செல்வது, அசுரத்தனமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசிக் கொண்டே ஓட்டுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
பங்குனி மாதம் வரையிலுமாவது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை எல்லா காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது ஏற்றத்தைக் கொடுக்கும். நவக்கிரகத்தில் சூரியன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications