Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு கனவெல்லாம் பலிக்கப் போகுது.. துணையிடம் பேசும்போது ரொம்ப கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய 4 கிரகங்களும் தங்கள் நிலையை அடுத்தடுத்து மாற்றுகின்றன.

செப்டம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 14-ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுன் பெயர்ச்சியாகி புதனுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்களும் நிகழ்கின்றனர். செப்டம்பர் மாதம் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். மனதில் இனம் புரியாத கோபதாபம் ஏற்படும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை தரும். யாரோ உங்களுக்கு ஏதோ செய்கிறார்கள் என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். குடும்பத்தில் துணையுடன், காதல் அமைப்புடன் வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கவனம்
உங்களிடம் இருப்பதை விட தொலைதூரத்தில் இருப்பது உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆனால் அதில் உள்ள கெடுதல்கள் உங்களுக்குத் தெரியாது. அதனால், கவனமாக இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது, தெய்வத்தை வழிபடுவது, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
அஷ்டமசனி
பண வரவு நன்றாக இருக்கும். அஷ்டமசனி உங்களுக்கு நடந்து கொண்டிருந்தாலும் நல்ல காலகட்டமாக இருக்கும். ஒன்றரை ஆண்டு காலத்துக்கு அஷ்டமசனி செயலற்று இருக்கும். எதிர்மறையான விஷயங்கள் தெரிந்தாலும் சமாளித்து செல்வீர்கள். அடிக்கடி நல்ல பயணங்களைச் செய்வீர்கள். அதன் மூலம் நல்ல விஷயங்களும் நடக்கும்.
ஆரோக்கியம்
மன அழுத்தம் இருக்கும் என்பதால் ஜீரண உறுப்புகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. லிவர், கிட்னி போன்ற டெஸ்டுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மந்திரங்களைக் கேட்பது பெரிய சந்தோஷத்தை தரும். அனுமன் சாலிஷா கேட்பது மன பாரம் குறையும். துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
வருமானம்
செலவுகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு வருமானங்களும் இருக்கும். பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு 3 ஆம் இடத்துக்கு செவ்வாய் மாறுவதும், குருவின் பார்வையில் இருப்பதும் முயற்சிகள் அனைத்தும் பழிக்கும் தன்மை உண்டாகும். நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து லாபங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
துணையிடம் தவறான வார்த்தையைப் பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. உங்களுடன் இருக்கும் உறவினர்களால் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகள் காணப்படும் வாய்ப்புள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் விநாயகரை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். கேது உங்கள் ராசியில் சூரியனிடம் இருப்பதால் விநாயகர் மற்றும், அனுமனை தொடர்ந்து வழிபடுவது, மந்திரங்களைக் கேட்பது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications