வார பலன்: சிம்ம ராசியை வாட்டி வதைக்கும் அஷ்டம சனி.. செலவுகளை இப்படி பண்ணுங்க
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். விரையங்கள் அதிகளவில் இருக்கும் காலகட்டமாக இருக்கும். அந்த விரையங்களை சுப விரையமாக மாற்றிக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளிடம், முதலாளிகளிடம் தேவையில்லா மன வருத்தம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் உங்களுக்கு எதிராக அவர்கள் எல்லா விஷயத்தையும் செய்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
அஷ்டமசனி
மேலதிகாரிகள், முதலாளிகளிடம் இணக்கமாக செல்வது, அல்லது விலகிக் கொள்வது நல்லது. அஷ்டம சனி உங்களை பாடாய் படுத்திக் கொண்டிருப்பதால் புரட்டாசி மாதம் வரை சிம்ம ராசியினர் கவனமாக இருப்பது மிக மிக நல்லது. சனிக்கிழமையில் அம்பாள் வழிபாடு யோக பலன்களை நிச்சயமாகக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் பற்கள், மயக்கம், தோல் அலர்ஜி தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
குடும்பம்
எந்தவித பதட்டமும் இந்த காலகட்டத்தில் தேவையில்லை. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். துணை, காதல் அமைப்பில் சரியாக இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம். உங்கள் மீது அக்கறையாக இருப்பவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வது நல்லது. அவர்களிடம் கோபப்படாமல் இணக்கமாக செல்வது நல்லது. உறவுகளிடமும், வெளியிடங்களிலும் எந்த ஒரு விஷயத்தையும் பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது நல்லது.
கவனம்
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் இனிமையான நேரத்தை செலவிடுவது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களிடம் இணக்கமாக செல்வது நல்ல பலன்களைத் தரும். எந்தவொரு காரியத்தை செய்யும் முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்ல பலன்களைத் தரும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications