Rasi Palan This Week: இந்த ஒரே விஷயத்தை தவிர்த்தா போதும்.. சிம்ம ராசிக்கு ஜாக்பாட்
வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் அமோகமாக இருக்கும். கடந்த காலங்களில் அதிகளவு பிரச்சகைளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இந்த பிரச்சனைகளில் இருந்தெல்லாம் விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விடும் வாரம் இது. உத்யோகம், தொழிலில் இருந்த சிக்கல்கள் நிவர்த்தியாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
நல்ல செய்தி
வியாபாரத்தில் இருந்த இழுபறி, சிக்கல்களும் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டு. காதல் உறவில் இனிமை கூடும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்தும் நல்ல நேரம். சுப காரிய தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.
சொத்து அமைப்பு
சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம், ஆடை ஆபரணங்கள், அத்தியாவசிய, ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். பொருளாதாரம் சிறப்பான உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்களும் தீரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதுக்கு பிடித்த நீண்ட காலமாக திட்டமிட்ட சுற்றுலா பயணங்கள் சென்று மகிழ்ச்சியடைவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
வெளிநாடு
வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயமடைவீர்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகள், வழக்குகள் ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை நிகழும். தொழிலில் அடுத்தக்கட்டதிற்கு செல்வதற்கான முன்னேற்றம் உருவாகும். பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு நடப்பது நன்மையை தரும்.
கவனம்
வார்த்தைகளில் கவனம் வேண்டும். கோபம், பதற்றத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறு கோபம் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை கோபத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வம்பு, தும்புகள் பக்கம் எட்டிப் பார்க்க கூடாது. உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது எல்லாவற்றிலும் வெற்றியை கொடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவது எல்லாவற்றிலும் வெற்றியை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications