Rasi Palan This Week: திரும்பி வந்துட்டேனு சொல்லு.. சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் அதிகளவு நற்பலன்களை பெறப் போகிறீர்கள். சுப காரிய தடைகள் விலகி, அடுத்தடுத்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். கல்வி, வேலைவாய்ப்பில் வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
புதிய பொறுப்பு
உத்யோகம், தொழிலில் ஏற்றம் காணப்படும். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட புதிய பொறுப்புகள் தேடி வரும். நிலம், வீடு, வண்டி, வாகனம், ஆபரணங்கள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை காணப்படும். முதலீடுகளில் லாபம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டம்
உத்யோகம், தொழில், கல்வி மூன்றிலும் திடீர் அதிர்ஷ்டம், முன்னேற்றம் ஆகியவற்றால் மகிழ்ச்சி உருவாகும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் செயலுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைகிறது. அதனால் கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்.
தூக்கமின்மை
எல்லாம் இருந்தாலும் மனதில் அவ்வபோது வீண் பதற்றம் காணப்படும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். மனதில் ஒரு வகை வெறுமை காணப்படும். கழுத்து, நரம்பு, மலக்குடல், சிறுநீரகம், ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். ஏற்கனவே இந்த பிரச்சனைகள் இருப்போர் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
வழிபாடு
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் விலகியே இருங்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். காதல் உறவாக இருந்தாலும் மனதில் இருப்பதை பேசுங்கள். ஆவணகங்களில் கையெழுத்திடும் முன்பு முழுமையாக படித்து பார்த்து தெளிவடைய வேண்டும். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். கோளறு பதிகம், அனுமன் சாலிஸா தினசரி உச்சரிப்பது எல்லாவற்றிலும் நம்பிக்கை, வெற்றியை ஏற்படுத்தும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications