கதவடைத்த ரங்கநாயகி தாயார்... சமாதானப்படுத்திய நம்பெருமாள் - ஸ்ரீரங்கம் சேர்த்தி சேவை கோலாகலம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருச்சி: உறையூரில் கமலவல்லி நாச்சியாரை பார்க்கப் போனதால் நம்பெருமாள் மீது ஊடல் கொள்கிறார் தாயார் ரங்கநாயகி, அவரை பார்க்காமல் கதவை படாரென்று சாத்தி கோபத்தை காட்டுகிறார். ஒருவழியாக ஊடல் முடிந்து திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதித்தனர். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரநாளில் நடைபெறும் இந்த சேர்த்தி சேவை சிறப்பு வாய்ந்தது. நேற்றைய தினம் நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நம்பெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு சென்றார் நம்பெருமாள். புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி அளித்த அவர், தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொண்டார். பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் 9 ஆம் நாள் நாளான வெள்ளிக்கிழமை ஆண்டில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் சோ்த்தி சேவையையொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உள்திருவீதி வலம் வந்து, தாயாா் சந்நிதியை 9.30 மணிக்கு அடைந்தாா். உறையூரில் கமலவல்லி நாச்சியாரை பார்க்கப் போனதால் நம்பெருமாள் மீது ஊடல் கொள்கிறார் தாயார் ரங்கநாயகி, அவரை பார்க்காமல் கதவை படாரென்று சாத்தி கோபத்தை காட்டினார். அவரை சமாதானப்படுத்தினார் நம்பெருமாள்.
பின்னா் சமாதானம் கண்டருளிய அவா் பகல் 12 மணிக்கு முன் மண்டபம் வந்து 1.30 மணிக்கு தளிகை அமுது செய்தலைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்துக்கு 2 மணிக்கு வந்து சோ்ந்தார்.
தொடர்ந்து தாயாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபமான பங்குனி உத்திர மண்டபத்திற்கு 2.15 மணிக்கு வந்து சேர்ந்த நம்பெருமாளும் தாயாரும் சர்வ அலங்காரத்துடன் சேர்த்தி சேவையில் மாலை 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை காட்சியளித்தார்.
இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். பின்னர் தீா்த்தவாரி கண்டருளுதலை தொடர்ந்து இரவு 12 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்று, தாயார் புறப்பட்டு 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தார்.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து, உதவி ஆணையர் கு. கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications