2025 சுக்கிரன் பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகள் பெறப்போகும் பலன்கள் என்ன தெரியுமா?
சென்னை: 2025 ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சுமார் 120 நாட்களுக்கு சுக்கிரன் உச்சமடைய போகிறார். இது 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் பலன்கள் கொட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொகுப்பில் கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான சுக்கிரன் பெயர்ச்சி குறித்து பார்க்க போகிறோம்.
பணப்புழக்கம், பொருளாதாரம், காதல், உறவுகள், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு சுக்கிரன் தான் அதிபதி. சுக்கிரன் அமைப்பு நன்றாக இருந்தால் ஒரு மனிதன் சுக போகமான வாழ்க்கையை வாழ முடியும். பொதுவாக சுக்கிரன் 45 நாட்களுக்கு உச்சமடைவார். இந்தமுறை ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைந்து சூரியனுடன் பரிவர்த்தனை செய்கிறார். மே மாதம் இறுதி வரை சுக்கிரன் உச்சத்தில் இருப்பார்.

சுக்கிரன் என்றாலே பாசிட்டிவ் கிரகம் தான். உச்சத்துக்கு ஒரு யோகம், பரிவர்த்தனைக்கு ஒரு யோகம், மாளவ்யா யோகம், புதனுடன் இணையும் போது மதனகோபால் யோகம், லட்சுமி நாராயண யோகம் என்று ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு யோகம் கிடைக்கும். ராகுவுடன் எந்த கிரகம் சேர்ந்தாலும் அது பெரியளவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்காது. ஆனால் உச்சமடைந்த சுக்கிரன் ராகுவுடன் சேரும்போது ஒரு யோகம் கிடைக்கும்.
ராகு யோக காரகன், சுக்கிரன் அதிர்ஷ்ட காரகன். அதனால் அந்த இரண்டு கிரகங்கள் இணைவது திருப்பு முனையாக இருக்கும். செவ்வாயை தவிர மற்ற எல்லா கிரகங்களுடனும் சுக்கிரன் சேர்க்கை இருக்கும். சுக்கிரனால் செலவு ஏற்பட்டால் கூட அது மகிழ்ச்சியான சுப செலவாக தான் இருக்கும். ஜூன் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துவிடுவார்.
கடகம் (Sukiran peyarchi for Kadagam): அஷ்டம சனி விலகியிருப்பதால் கடகம் ராசி மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள். கடக ராசிக்கு சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் உச்சமடைவார். வக்கிரமடைந்து ராகு, சனி உள்ளிட்ட பல கிரகங்களுடன் பயணிக்கப் போகிறார். 11வது இடத்தில் உள்ள குருவுடன் பரிவர்த்தனையும் நடக்கப் போகிறது. 9 என்றால் அதிர்ஷ்டம், 11 என்றால் லாபம். முக்கியமாக பணத்தை குறிக்கும். அதனால் இந்தமுறை சுக்கிரனால் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். தொழிலில் வருவாய் நன்றாக இருக்கும்.
எதிர்பார்க்காத பலன்கள் தேடி வரும். லாட்டரியில் ஜேக்பாட் கிடைக்கும் காலம். காதல் உறவு திருமணமாக மாறும். முதலீடுகளை திட்டமிடுவதற்கான நேரம். பிடித்த வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறைக்கும் நேரம் நன்றாக இருக்கும். பெயர், புகழ், பொருளாதாரம் எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருக்கும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ராசி என்பதால் உங்களை அனைவரும் புரிந்து மகிழ்ச்சியளிப்பார்கள். பொருளாதாரத்திலும் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
சிம்மம் (Sukiran peyarchi for Simmam): சிம்மம் ராசிக்கு சுக்கிரன் எட்டாவது இடத்தில் உச்சமடைவார். பத்தாம் இடத்தில் ஏற்கனவே குரு இருக்கிறார். புதன், சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களுடனும் சுக்கிரன் பயணிப்பார். அசையா சொத்துகளின் மூலம் பங்கு வந்து சேரும். எதிர்பார்க்காத சில அதிர்ஷ்டங்கள் இருக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படும். லாட்டரியிலும் முயற்சி செய்யலாம்.
பிரச்னைகள் சூழ்ந்தாலும் ஆறுதலடைய சில விஷயங்கள் கிடைக்கும். பெரியளவுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும். இருப்பினும் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் - வாங்கலை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி மற்றும் நீண்ட கால உறவில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி (Sukiran peyarchi for Kanni): கன்னி ராசிக்கு சுக்கிரன் ஏழாவது இடமான மாளவ்யா யோகத்துக்கு வருகிறார். அங்கு புதன் கிரகமும் உடனிருப்பார். அங்கு ராஜயோகம், தர்ம கர்மாபதி யோகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். பணவரவுக்கு எந்த குறையும் இருக்காது. பயணம் மூலம் மனம் மகிழ்ச்சியடையும். சுக்கிரன் மற்றும் குருவால் அதிர்ஷ்டங்கள் உண்டு.
காதல் உறவு வெற்றிகரமாக திருமண உறவாக மாறும். வண்டி, வாகனம் மாற்றத்துக்கும் வாய்ப்புள்ளது. லாட்டரி ஜேக்பாட்டுக்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். கலை, விளையாட்டுத்துறையினருக்கு பெரிய திட்டங்கள் கையெழுத்தாகும். மனம் நிறைவாக இருக்கும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications