கன்னி ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பணம் கொட்டும்.. காதல் விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

sukkiran-peyarchi-2025-kanni-rasi-people-get-lots-of-good-benefits-and-money-during-this-period

சுக்கிரன் பெயர்ச்சி

நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.

சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்துக்குப் பெயரச்சி ஆகிறார். சுக்கிரன் 2 க்கு உரியவர். தனம், குடும்பம், வாக்கு ஸ்தானதிபதி. உங்களுக்கு பாக்கியத்தைக் கொடுக்கக் கூடியவரும் சுக்கிர பகவான் தான். சுக்கிரன் 8 இல் போவதால் எவ்வித அச்சமும் தேவையில்லை. வெளிநாட்டு யோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

திடீர் பண வரவு

திடீர் பண வரவுகள் உண்டாகும். அப்படி பணம் வரும்போது அதனைக் கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாமல் இருப்பது நல்லது. வாக்கு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதைப் பேச வேண்டுமோ அதைப் பற்றி மட்டுமே பேசுவது நல்லது. நல்லதையே பேசினாலும், செய்தாலும் அது மற்றவர்களுக்கு தொந்தரவாகும் அமைப்பு உண்டு. அதனால், மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ராஜயோகம்

குடும்பாதிபதி 8 இல் மறைவதால், கணவன், மனைவி, உறவுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கேது 12 இல் இருப்பதால் 8க்குரிய செவ்வாய் 12 ஆம் இடத்தில் மறைவதால் ராஜயோகம் கிடைக்கும். தன வரவு அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த நன்மையைப் பெறுவீர்கள்.

வெளிநாடு வாய்ப்பு

மறைந்துள்ள தனம் உங்களுக்கு கிடைக்கும். அந்த தனம் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரத்தில் இருக்கும்போது உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஜூன் 12 முதல் 25 ஆம் தேதி வரை கன்னிக்கு சூப்பரான காலகட்டமாக இருக்கும்.

திருமண யோகம்

வழக்கு சார்ந்த விஷயங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். வலியைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்தெல்லாம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நல்ல மருத்துவர்கள், மருத்துவமனைகள் கிடைக்கும். சுக்கிரன் 8 இல் மறைவதால் திருமணம் யோகம் கைகூடும். நல்ல வரன் கிடைக்கும். நல்ல உறவு உங்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகும்.

காதலில் உஷார்

குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விஷயத்தில் மிகுந்த உஷாராக இருப்பது நல்லது. காதலில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு, வெளிமாநிலம், அந்நிய தேசம் சிறப்பு பெறும், குழந்தைகள் நலன் படிப்பு நன்றாக இருக்கும். குரு 10 ஆம் இடத்தில் அமர்ந்து 4 ஆம் இடத்தை பார்ப்பதால் படிப்பு அமோகமாக இருக்கும்.

வேலைப் பளு

சுக்கிரன் பெண்களைக் குறிக்கக்கூடிய கிரகம் என்பதால் அலைச்சல், டென்சன், பிரஷர் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் பளு உண்டாகும். இடத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவது நல்லது. மாமன், மாமன் சார்ந்த உறவுகள் சிறப்பு பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 25 க்குப் பிறகு சூரியனின் நட்சத்திரத்தில் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் நிச்சயம் கிடைக்கும். பங்குச் சந்தையில் பண வரவு உண்டாகும்.

பணம்

வெளிநாட்டில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட விஷயங்கள், உணவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்பு பெறும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+