ரிஷபம் ராசிக்கு இந்த ஆண்டில் அடிக்கும் ஜாக்பாட்?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்!
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு ரிஷபம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. ரிஷபத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டு அற்புதமான பலன்களைக் கொடுக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். பொருள் சேர்க்கை உண்டாகும். வாங்குவது, விற்பது, திருமணம் நடப்பது, வீடு கட்டுவது, வீட்டில் இன்டீரியர் டெக்கரேட் செய்யும் யோகம் உண்டாகும். தாய் தந்தைக்கு 60 ஆவது திருமணம் செய்து வைப்பது போன்ற அமைப்பு உள்ளது.
வீடு வாங்கும் யோகம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். அப்பா, அம்மாவுக்கு வீடு, வண்டி வாங்கிக் கொடுக்கும் யோகம் உண்டு. பெற்றோரின் மனதை குளிர வைப்பீர்கள். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். பெரிய தொழிலதிபராவது, அரசியலில் மந்திரி, எம்எல்ஏ, ஊராட்சி கவுன்சிலர் போன்ற பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தேர்வில் வெற்றி
நீட் தேர்வு, அரசுத் தேர்வு எழுதியவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். கழுத்து தொடர்பான உடற்பயிற்சிகளை செய்வது மேன்மையைத் தரும். திருமண யோகம் உண்டு என்பதால் அதனைத் தள்ளிப் போடாமல் செய்து கொள்வது நல்ல அமைப்பாகும். தேவையில்லாத காரணங்களைக் கூறி திருமணத்தை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
ப்ரோமோஷன்
பணி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகப் பயிற்சிகளில் தேர்ச்சியடைவீர்கள். பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து நற்செயல்களைச் செய்வீர்கள். அதில் வரும் வருமானத்தை வைத்து சில தான தர்மங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
வழிபாடு
சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும். கழிவுப்பாதை, முதுகு தண்டுவடம் தொர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ரிஷப ராசியினருக்கு ஸ்ரீரங்கநாதர் வழிபாடு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
