Tamil Puthandu Palan: சிம்மம் ராசிக்கு பராபவ வருடம் எப்படி?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்!
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு சிம்மம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. சிம்மத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசியினர் சனியால் அச்சப்படத் தேவையில்லை. நிறைய நன்மைகள் நடக்கும். மன அழுத்தம் இல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றண் ஏற்படும். யோக பலன்கள் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, அதீத நன்மைகள் உண்டாகும்.
ஆரோக்கியம்
காஸ்மெடிக் சர்ஜரி போன்றவற்றை செய்வீர்கள். பற்கள் தொடர்பான பரிசோதனை, ஆயுர்வேதிக் சிகிச்சை முறைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்தவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தங்கம், ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
தெளிவு பெறும்
மனம் தெளிவடையும். காணாமல் போன பொருள்கள் மீண்டும் கிடைக்கும். வார்த்தையில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். தொழிலை யோசித்து விரிவுபடுத்துவது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. 24 வயதைக் கடந்தவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அலர்ஜி, தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.
-
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications