தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கொட்டும் பணம்.. திருமணத்தில் கவனம்
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. மகரத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசியினருக்கு வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு நன்றாக இருக்கும். திருமணமாகும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். அரசியல், அரசு கெளரவம் ஏற்படும். படைபபாளிகள், மீடியா துறையினருக்கு நல்ல காலகட்டம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். அதில் சாகசம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
தொழில்
தைரியமாக புதிய தொழிலை தொடங்கும் யோகம் உள்ளது. தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். முதலாளிகள், அதிகாரிகளில் ஆதரவு ஏற்படும். திடீர் பண வரவு உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். துணையின் உடல்நிலையை கவனமாகப் பார்ப்பது நல்லது.
திருமண யோகம்
தைரியம், நம்பிக்கை ஏற்படும். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால் துணையிடம் பேச்சு வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் திருமணம் நிற்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம். குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
கவனம்
ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் இருப்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தினந்தோறும் காரிய சித்தி மாலை, கோளார் பதிகம் கேட்பது, படிப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் ஜெயம் ஏற்படும். எந்தவொரு விஷயத்தையும் நிதானம், பொறுமையுடன் கையாளுவது நன்மை பயக்கும். நரம்பு, தலைவலி, முதுகு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சியை விடாமல் கடைப்பிடிப்பது நல்லது. மகர ராசியினர் பிள்ளையார்பட்டி சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications