தமிழ் புத்தாண்டு பலன்: தொட்டதெல்லாம் தங்கம்.. தனுசு ராசிக்கு செம மவுசு
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், தனுசு ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு - புத்தாண்டில் அருமையான பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். சமூகத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நிலம், வீடு, வாசல், வண்டி, வாகனம், ஆடை, ஆபரணங்கள் என்று அசையும், அசையா சொத்து சேர்க்கை நிச்சயம் உண்டு. உங்கள் மனதுக்கு பிடித்தபடியான வாகனங்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்டம்
குரு பகவானால் சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். தொழிலில் இருந்த இழுபறி நிலை மாறும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
லாபம்
தெளிவாக திட்டமிட்டு எடுக்க கூடிய முடிவுகளால் உங்களுக்கு பிரமாண்ட வெற்றி கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது திருமண யோகம் உண்டாகும். சுப காரியங்களினால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
வாழ்க்கை துணை
வாழ்க்கை துணையால் அருமையான நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு உத்யோகம், தொழிலில் இருந்த நிதி நெருக்கடி குறையும். கடன் சுமை இருக்காது. பண வரவு திருப்தியாக இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் சந்திப்புகள் உயர்வை தரும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு.
ஆரோக்கியம்
தாய், தந்தை மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுடன் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் அந்நியர்கள் தலையீடு இருக்க கூடாது. பிறர் குடும்ப விஷயங்களில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. வயிறு, கழுத்து, முதுகு தண்டு, கால் பாதம் ஆகிய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அதனால் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். பஞ்சமுக ஆஞ்சிநேயர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து, அங்கு பசு நெய், நல்லெண்ணெய் கொடுப்பதும் யோகத்தை ஏற்படுத்தும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications