தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. கோபத்தை மட்டும் குறைப்பது நல்லது
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், கன்னி ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில்
கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் திருப்பதி திருமலையில் ஒரு இரவு தங்குவது பெரிய நன்மை, அனுகூலத்தை தரும். ஜூன் மாதத்திற்குள் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், அரசியல் என அனைத்திலும் வலிமையான ஒரு அஸ்திவாரத்தை போட்டு வைத்துக் கொள்ள ஏற்ற காலமாக இருக்கும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், அரசியலில் இருந்தால் கூட்டணி மாற்றம் வரை எல்லா வகையாந மாற்றங்களும் உங்களுக்கு உண்டாகும் காலம்.
கவனம்
தொழிலில் கோபதாபத்தால் முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தவறான முடிவுகளை திடீரென எடுக்காமல் இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை தவிர்ப்பது நல்லது. பழைய எதிரிகள் விஷயத்தில் இருந்த பதட்டங்கள் குறையும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
வெற்றி மேல் வெற்றி
தொட்டது துலங்கக்கூடிய அனுகூலமான நேரம். உத்திரவாதத்துடன் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் அனைத்திலும் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பழைய கூட்டாளிகளுக்கும், உங்களுக்கும் இருந்த பகை மாறி சந்தோஷம் ஏற்படும். உபத்திரவம் இல்லாமல் அனுகூலம் உண்டாகும்.
மதிப்பு, மரியாதை
சமுதாயத்தில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல அந்தஸ்து, மரியாதை உண்டாகும். எல்லா விதத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். பயணங்கள் சமயத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. உடன் இருப்பவர்களிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். கன்னி ராசிக்காரர்களுக்கு ஒற்றை தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
தொழில்
இரண்டு மாதத்துக்குப் பிறகு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து ராசி, லக்கினத்தைப் பார்ப்பதால் பெரிய மாற்றங்கள் ஏற்படும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். 7 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் சேர்ந்துள்ளதால் தொழில் தொடங்குவதற்கு அருமையான காலகட்டமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில், கல்வி தொழில், நிதி துறை சார்ந்த தொழில்கள் உங்களுக்கு கைகொடுக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
பண வரவு
குடும்பத்தில் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. குருவின் பலத்தால் மே மாதத்துக்குப் பிறகு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். புதிய ஆர்வம் உண்டாகும். சுபகாரியம் உண்டாகும். வீடு கட்டும் யோகம் உண்டு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மே மாதத்துக்குப் பிறகு பண விஷயம் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.












Click it and Unblock the Notifications