தமிழ் புத்தாண்டு பலன்: வாகனத்தில் அதிக கவனம்.. மகரம் ராசிக்கு ரெட் அலர்ட்
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மகர ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம் - மகர ராசியினர் புத்தாண்டில் அதிகளவு நற்பலன்களை பெற போகிறீர்கள். உங்கள் வாக்கு ஸ்தானம் பலமடையும். குடும்பத்திலும், சமூகத்திலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். சுப காரியங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகி, சுப செலவுகள் ஏற்படும். நிலம், வீடு, வண்டி, வாகனம், நகை, ஆபரணம், ஆடை உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகள் இணையும்.
மகிழ்ச்சி
எதிர்பார்த்த கடன் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் இருக்கும். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். ஏழரை சனி விலகியிருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். குரு பார்வையால் இறங்கிய காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெளிநாடு
கடன் சுமை குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் இருப்போருக்கு அதில் நல்ல செய்தி கிடைக்கும். சகோதர வழி உறவில் இருந்த பிரச்னைகள் சரியாகி, அவர்களால் ஆதாயம் உண்டு. மனதில் நீண்ட காலமாக நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளால் பெருமை கொள்வீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் உண்டு. தொழில் விருத்தியாகும்.
ஆரோக்கியம்
வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிரிகளிடம் அதிக கவனம் தேவை. பயணங்களில் முன்னெச்சரிக்கை அவசியம். மூக்கு, வாய், தொண்டை, நரம்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல வாகனங்களில் அதிகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணங்களை மிகவும் பாதுகாப்புடன் திட்டமிட வேண்டும்.
வாகனம்
புதிய நபர்களை நம்ப வேண்டாம். ஆவணங்கள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை வழிபடுவது தடைகளை நீக்கி நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications