கோடீஸ்வர யோகத்தை குவிக்கும் 3 ராசியினர்.. அதிர்ஷ்டம், பணம் கொட்டும்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டு மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண வரவை அள்ளித் தரப் போகிறது. அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் யார், என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும்.

அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசியினர் யார், என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேஷ ராசியினருக்கு ஏழரை சனியால் எந்தவித பெரிய தாக்கமும் ஏற்படாது. மேஷ ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். மே மாதம் 11 ஆம் தேதிக்குப் பிறகு திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் கண்டிப்பாக வரும். பெரிய முதலீடுகளைச் செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். முதலீடுகளில் பன்மடங்கு லாபம் கட்டாயம்.
சூரிய பகவான் மேஷ ராசி வியாபாரிகளுக்கு மிகுந்த நன்மைகளைத் தரப்போகிறார். தொழில் தொடங்குவதற்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் நிதித் திட்டங்களில் கவனம் செலுத்த நல்ல நேரமாக இருக்கும். 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பண வரவு அபரிமிதமாக இருக்கும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும் காலகட்டம். 12 இல் சனி வருவதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்: ஜென்ம குரு விலகுகிறது. லாப ஸ்தானத்தில் சனி பகவான் வருகிறார். பட்டம், பதவி, பெயர், புகழ் உண்டாகும். குடும்பம், வாக்கு, தனம், கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அபரிமிதமாக சேமிக்கக்கூடிய யோகம் உண்டாகும். நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவது நல்லது. வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
தொழிலில் நல்ல மாற்றம் வரும். பணத்துக்கு குறைவிருக்காது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தரும் வளம் மிக்க ஆண்டாக இருக்கும். தொழில் செய்யும் பெண்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். நல்ல லாபத்தைக் காண்பீர்கள். திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டில் பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் தொடங்கினால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். செல்வத்தை ஈர்க்கக்கூடிய திறன் உண்டாகும். சுப காரிய தடைகள் நீங்கும். நிதி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்ல பலன்களைத் தரும். எடுத்த காரியங்களில் வெற்றியை குவிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
குரு 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துகள் சேரும். முதலீடுகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் கிடைக்கும். செல்வத்தைக் குவிக்கும் யோகம் உண்டாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications