Tamil Puthandu Palan: மீனம் ராசிக்கு கை மேல் பலன்.. குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம், பண வரவு
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam rasi palan)
மீனம் ராசியினருக்கு பெரிய விடுதலை கிடைக்கும் காலகட்டமாக இந்த தமிழ்ப் புத்தாண்டு இருக்கும். ஜென்ம சனியில் 30 வயதில் இருப்பவர்களுக்கு நல்ல நிலைமைகள் எதுவும் இல்லை. இளைய பருவத்தினருக்கு ஒருவிதமான பலன்களும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நல்ல பலன்களும் கிடைத்துக் கொண்டிருந்கிகன்றன. பாதிப்புகளைச் சந்தித்து வரும் இளைய பருவத்தினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
பெருமை
மாற்றங்கள் வருவதை உறுதிப்படுத்தும் ஆண்டாக இருக்கும். ஜென்மசனியின் தாக்கம் குறையக்கூடிய ஆண்டாக அமையும். நிறைய நன்மைகளைத் தரக்கூடிய யோகம் உண்டு. ராசிநாதன் குரு பகவான் பஞ்சம ஸ்தானத்துக்குப் பெயர்ச்சியாவதால் பிள்ளைகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். பெற்றவர்களைப் பற்றி பிள்ளைகள் வெளியில் பெருமையாகப் பேசும் அமைப்பு உள்ளது.
திடீர் பண வரவு
பெற்றோர் கடல் கடந்து பயணம் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். மனதில் தெளிவு பெறும். உச்சம் பெற்ற குருவின் பார்வை சொந்த ராசியில் படுவதால் மனம் தெளிவடையும். சிந்தனை தெளிவாக இருக்கும். திடீர் தன வரவு, செல்வாக்கு கூடக்கூடிய அற்புதமான ஆண்டாக இருக்கும்.
போட்டிகளில் வெற்றி
விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பிரகாசமாக இருப்பீர்கள். வெற்றிகளை குவிக்கக் கூடிய யோகம் உண்டாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோல்டு மெடல் வாங்குவது, மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
குரு பார்வை
கடந்த 3 ஆண்டுகளாக நிறைய கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். வேலையை விட்டு நின்று விடலாம் என்ற எண்ணங்கள் ஏற்பட்டிருக்கும். வீட்டிலும் நிம்மதியை இழந்திருப்பீர்கள். இந்தப் புத்தாண்டில் குரு உச்சம் பெற்றுள்ளதால் ஜென்ம சனியால் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். குருவின் பார்வை 7 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
வழிபாடு
இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறும் யோகம் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய மேனேஜர் கிடைப்பார்கள். புதிய வேலை கிடைத்து செல்லும் அமைப்பு உள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பது போன்ற நன்மைகள் ஜூன் மாதத்தில் இருந்தே கிடைக்க ஆரம்பித்துவிடும். தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications