தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு முதல் நீங்கள் சொன்னதெல்லாம் நடக்கும் காலகட்டம். இவ்வளவு நாள் அவமரியாதை சந்தித்து வந்திருப்பீர்கள். உங்களிடமிருந்து அட்வைஸ் வாங்கி மற்றவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள். கழுத்துப் பகுதியில் பிரச்சனைகள் வந்திருக்கும். எந்த விஷயத்தை பேச வேண்டுமோ அதைத் தவிர மற்ற விஷயங்களை எல்லாம் பேசி நேரத்தை வீணடித்திருப்பீர்கள்.
இனி ஏறுமுகம் தான்
நம்பி நம்பி ஏமாந்து போயிருப்பீர்கள். நிறைய பாதிப்புகள், டென்ஷன் இருந்திருக்கும். அடிக்கடி காலில் அடிபடுவது என கடந்த ஆண்டு பல விஷயங்களில் பாதிப்புகளை சந்தித்திருப்பீர்கள் வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கும். குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும். ஆனால், உங்களுக்காக எந்தவித நல்ல விஷயங்களும் நடந்திருக்காது.
ஆனால், இப்போது 2 ஆம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் எதிர்பார்க்காத அளவுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு டிசம்பர் மாதம் வரை அங்கு அமர்ந்திருப்பதால் வெளியூர் பயணங்கள் நிறைய ஏற்படும். வெளிநாடு சென்று வருவது, கோயிலுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.
பணம் கொட்டும்
குரு உச்ச ஸ்தானம் அடையும் போது புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரத்தில் வெளியே போகும்போது 2027 மே மாதம் வரை பணம் கொட்டும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. எப்படி சேமிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடித்துக் கொள்வது நல்லது. நிறைய பேருக்கு பேங்கில் வேலை கிடைக்கும். டெல்லர், பினான்சியர், கேஸியர் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொழிலில் ஏற்றம்
மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சொற்பொழிவாளர்கள், தங்க வியாபாரிகள், மெட்டல் வியாபாரிகள், விவசாயிகள், நெல், உரம் உற்பத்தியாளர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் நல்ல காலகட்டம். பணம், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
ரகசியம் காப்பது
வீட்டில் நடக்கும் எந்த விஷயங்களையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. ரகசியங்களைக் காப்பது நல்லது. எந்த விஷயங்களை செய்தாலும் யாரிடமும் சொல்லாமல் செய்து முடிப்பது நல்லது. தொழிலில் பெரிய மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு பெரிய மதிப்பு, மரியாதை இருக்கும். பேச்சு வன்மை அதிகரிக்கும்.
புதிய விஷயங்கள்
தம்பி அல்ல மாமனாரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மனைவி அல்லது கணவருடைய அடிவயிறு, கர்ப்பப்பை பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பது நன்மை பயக்கும். அற்புதமான காலகட்டமாக இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நிச்சயமாக தங்கம் சேமிக்கும் யோகம் உண்டு. சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்கும் யோகம் உண்டு. சைனஸ் தொடப்பான விஷயங்களில் கவனம் தேவை.
வழிபாடு
மாணவர்கள் வாய் விட்டுப் படிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். அரசு வேலைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்றும் டென்டிஸ்ட் ஆகும் வாய்ப்புள்ளது. உடுப்பி கிருஷ்ணரை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். அங்கு போடும் அன்னதானத்தை சாப்பிட்டு வருவது, தான தர்மம் செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications