தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசியினருக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும் காலகட்டம். 3 ஆம் இடத்தில் குரு அமர்ந்து உச்ச ஸ்தானம் பெறுவதால் பண வரவு நன்றாக இருக்கும். ஜூன் மாதம் வரை அற்புதமான பண வரவு இருக்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு நிலத்தை விற்கும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு இடமாற்றங்கள் உண்டாகும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

குரு பார்வை
மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். ப்ரீ ஸ்கூல் ஆரம்பிக்கும் யோகம் உண்டு. குருவின் பார்வை பலம், ஸ்தான பலம் நன்றாக இருப்பதால் வீட்டில் இளைய சகோதரன், சகோதரிக்கு திருமணமாகும் யோகம் உண்டாகும். வெப்சைட் ஆரம்பிப்பது, ஆப் ஆரம்பிப்பது, ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது, ஆன்லைனில் தொழில் செய்வது போன்ற யோகம் உண்டாகும்.
வேலையில் யோகம்
ராகு வலிமையாக இருப்பதால் வேலையில் உங்களை யாரும் பகைத்துக் கொள்ளக்கூடாத நிலைமை உண்டாகும். மீடியா, அலைந்து திரிந்து வேலை செய்பவர்களுக்கு கிஃப்ட், சலுகைகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் தீரும். இடம் விற்கும் யோகம் உண்டாகும். அப்பார்ட்மெண்ட் வாங்கும் அமைப்பு, யோகம் உள்ளது.
வீடு கட்டும் யோகம்
3 ஆம் இடத்தில் குரு அமர்வதால் மாடியில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்பு சரியாகும். தோள்பட்டை, சைனஸ், மூச்சு சார்ந்த பிரச்சனை, கழுத்து தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய நன்மதிப்பு, மரியாதை, புகழ் உண்டாகும். கெட்ட பெயர் நீங்கும்.
புதிய வாய்ப்பு
புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெண்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பீர்கள். வங்கியில் எந்த கடன்களை வாங்கியிருந்தாலும் அவை தீரும். ஜூன் மாதத்திற்குள் அபரிமிதமான பணம் வரும். இந்தப் பணத்தை முதலீடு செய்து கொள்வது நல்லது. அக்டோபர் மாதத்திற்கு மேல் பெரிய பணங்கள் வந்து சேரும். முதலீடு செய்து வைத்திருந்த பணங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.
வெற்றி மேல் வெற்றி
மாணவர்கள் சோபாவில் அமர்ந்து படித்தால் கண்டிப்பாக வெற்றி பெறும் யோகம் உண்டாகும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். யானையிடம் ஆசிர்வாதம் பெறுவது நன்மையைத் தரும். 100 க்கு 90 சதவீதம் நன்மைகள் உண்டாகும் காலகட்டம்.












Click it and Unblock the Notifications