தமிழ் புத்தாண்டு பலன்: "காசு பணம் துட்டு மணி மணி".. கும்ப ராசிக்கு கொட்டும் லாபம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்ப ராசியினருக்கு 2 ஆம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் பாத சனியாக உள்ளது. தொழிலில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது. காலையில் 6 முதல் 7 மணிக்குள் விளக்கேற்றுவது நன்மையைத் தரும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடைய விஷயத்திற்குள் செல்லாமல் இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இருந்த மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
வார்த்தையில் கவனம்
உங்களை சுற்றி நல்ல மனிதர்களை வைத்துக் கொள்வது நல்லது. உங்களைப் பற்றி புகழ்ந்து கொண்டே இருப்பவர்களை நம்பாமல் இருப்பது நன்மை பயக்கும். வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 2 ஆம் இடத்தில் அடுத்த இரண்டரை வருடம் வாக்கியப்படி சனி இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. செல்போனில் பேசும்போது மற்றவர்கள் ரெக்கார்டு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
லாபம் கொட்டும்
தேவையில்லாத பகை வருவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல லாபமும், சுப விரய பிராப்தமும் ஏற்படும். 6 இல் குரு வந்து மறைந்தாலும் திருமண யோகம் உண்டாகும். 2 இல் இருக்கும் சனி திருமண யோகத்தைக் கொடுக்கும். நிறைய பிரச்சனைகள் தீரும். அற்புதமான அமைப்புகள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கக்கூடிய யோகம் ஏற்படும்.
ஆரோக்கியம்
ஜென்மத்தில் ராகு இருப்பதால் மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. வயிறு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தோல்பட்டை வலி, கை, கால் வலி, மரத்துப் போவது, தூக்கத்தி கால் பிடிப்பு போன்றவை ஏற்படும். முதுகு, அடிவயிறு, கழிவுப் பகுதி, மறைவு ஸ்தானங்களில் வரும் பாதிப்புகளில் கவனம் தேவை. சர்க்கரை வியாதி இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பண வரவு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிரிகளை மிக சாதாரணமாக எடை போடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத கடன் கொடுப்பது, ஜாமீன் கொடுக்க வேண்டாம். பணத்தை இழப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கும்ப ராசியினர் திருநள்ளாறு சென்று வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications