தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. பேச்சினால் வரப்போகும் கண்டம்.. கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மகரம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசியினருக்கு அஷ்டமத்தில் சனி இருக்கும் கேது டிசம்பர் மாதம் வரை இருக்கிறது. நரம்பு, தலைவலி, முதுகு வலி தொடப்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. எல்லா விதமான நன்மைகளும் நடக்கும். குரு பார்வை வருவதால் நல்லவை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.
தங்கம் வாங்கும் யோகம்
நகை வாங்கும் யோகம் உண்டாகும். அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும். திருமண யோகம் உண்டு. வீடு கட்டுவது, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பாசிட்டிவான நிலைமைகள் ஏற்படும். நகை வாங்குவது, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. நிறைய அதிசயங்கள் நடக்கும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். சனி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு வாக்கியப்படி 3 ஆம் இடத்தில் இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும்.
பேச்சில் கவனம்
வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் அமைப்பு உள்ளது. அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும். உறவினர்களால், நண்பர்களால் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. நல்லது பேசப் போய் அது கெட்டதில் முடியக்கூடிய வாய்ப்புள்ளது. பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.
தவிர்க்கவும்
வண்டிகளில் செல்லும் போது உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வழுக்கலான இடங்கள், படிக்கட்டுகளில் செல்லும்போது பார்த்து செல்வது நல்லது. இளைஞர்களுக்கு பெற்றோர் அதிவேக இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
மகர ராசியினர் பிள்ளையார்பட்டியில் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். பாலாபிஷேகம், அபிஷேகத்துக்கு கொடுப்பது நன்மை பயக்கும். தினந்தோறும் வீட்டில் பிள்ளையார்பட்டி விநாயகர் படத்தை வைத்து அகல்தீபம் ஏற்ற வேண்டும். வீட்டுக்கு அருகில் இருக்கும் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்யலாம். மாதத்திற்கு ஒருமுறை விநாயகர், சிவன் வழிபாடு நன்மையைத் தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications