தமிழ் புத்தாண்டு பலன்: மீனம் ராசிக்கு குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் (Meenam Rasi Palan)
மீனம் ராசியினருக்கு வரும் குருப்பெயர்ச்சி விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். சனி பகவான் ராசியில் இருப்பதால் உங்களுடைய மன தைரியம் குறையும். பிள்ளைகள் விஷயத்தில் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு வந்தாலும் மனதில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் மீதான மன தைரியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றை தினந்தோறும் செய்வது உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.

முதலீடுகள்
உங்களுடைய திறமையை நிரூபிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ராகு பகவான் லாபத்தில் வருவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஜென்மத்தில் சனி இருந்தாலும் நிறைய சவால்களை தைரியமாக செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் நஷ்டம் உங்களுக்கு இருக்காது. பங்குச் சந்தை முதலீடு, வியாபார முதலீடுகளை தைரியமாக செய்யலாம்.
பயம் நீங்கும்
மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை தூக்கிப் போட்டாலே நிறைய விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த தயக்கங்கள் எல்லாம் மாறும். ராசிநாதன் குரு பகவான் உச்சமடைந்து ராசியைப் பார்ப்பதால் மரண பயம் நீங்கும். மன ரீதியாக இருந்து வந்த குழப்பம் நீங்கும். நிறைய தடுமாற்றங்கள் உங்களுக்கு இருந்து வந்திருககும். வீடு, குடும்பம், வேலை, கணவன், மனைவி தொடர்பாக இருந்து வந்த பல்வேறு சிந்தனைகள் எல்லாம் நீங்கி அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
பஞ்சம ஸ்தானத்தில் குரு உச்சமடைவதால் இந்த வருடத்தில் திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு, திடீர் யோகம், திடீர் சுபசெய்தி கண்டிப்பாக நடக்கும். 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சி அற்புதமாக இருக்கும். பண வரவில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். கை நிறைய செலவு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் இருக்கும் ராகு விலகுவதால் சுப விரயங்கள் நிறைய ஏற்படும்.
சுப காரியங்கள்
திருமணம் செய்வது, வண்டி வாகனம் வாங்குவது, சுய தொழில் தொடங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். 6 இல் இருந்து கேது விலகுவதால் மறைமுக இருந்து வந்த எதிரி, பிரச்சனை, கடன்கள் எல்லாம் தீரும். பிள்ளைகளால் பெயர், புகழ், அந்தஸ்து, கீர்த்தி கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் வெற்றி பெறும் அற்புதமான நேரமாக இருக்கும்.
குரு பார்வை
குருவின் பார்வை இருப்பதால் மன கலக்கம் நீங்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லக்கூடிய யோகம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த மன துன்பங்கள் நீங்கும். திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தடைகள் எல்லாம் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.












Click it and Unblock the Notifications