தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)

துலாம் ராசிக்கு இருக்கும் வேலையை ரொம்ப கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாக்கியத்தில் குரு ஜூன் மாதம் வரை இருப்பதால் அற்புதமான நல்ல காலகட்டமாக இருக்கும். வீட்டில் எல்லா நல்ல காரியங்களும் நடக்கும். எல்லாருமே உங்களை அழைத்துப் பேசுவார்கள். உங்களுடைய பார்வை, திட்டமிடுதல், கலாசாரம் எல்லாமே சரியாக இருக்கும்.

tamil-puthandu-palan-what-kind-of-benefits-will-get-thulam-rasi-people-during-this-period

இடமாற்றம்

ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வேலையில் நிறைய சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்தில் குரு வந்து அமர்வதால் கண்டிப்பாக இடாமாற்றம், வேலை மாற்றம், துறை மாற்றம், அலைச்சல் நிறைந்த வேலை போன்றவை அமையும். கன்சல்டன்ட் உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். புது வேலை, புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

10 இல் குரு

ஒப்பந்தம் போடுவது, வாடகை வருமானம் வியாபாரம் செய்வது, நிர்வாகம் பார்க்கக்கூடிய வியாபாரம், சப் கான்டிராக்ட் கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் குரு, திரிகோணத்தில் சனி வரும்போது வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்களுக்கு நன்றாக இருக்கும்.

கவனம்

பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகளில் வேலை கிடைக்கும். துலாம் ராசியைப் பொருத்தவரை உங்கள் மேலதிகாரிகளுக்கு அட்வைஸ் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்புவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்படும். தாயின் உடல்நிலை, பாட்டி, தாத்தா உடல்நிலையில் கவனம் தேவை.

பணவரவு கொட்டும்

காசு, பணத்திற்கு எந்தவிதமான பஞ்சமும் இருக்காது. வீட்டில் சுபிக்ஷம், மனநிம்மதி ஏற்படும். பயப்பட வேண்டிய அவசியமில்லை. முக்கியமான விஷயங்களை வீட்டில் ஆலோசித்துவிட்டு செய்வது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அத்தியாவசியமான விஷயங்கள் நன்றாக இருக்கும். கடன் கம்மியாகும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். இன்ஜினியரிங் துறையில் பெரியளவுக்கு சாதிக்கும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

தொழில்நுட்பம், பொறியியல் சார்ந்த துறை, மருத்துவம் சார்ந்த துறை, மீடியா துறை நன்றாக இருக்கும். காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயாரை வழிபாடு செய்வது நல்லது. திங்கள்கிழமை காலையில் 6 முதல் 7 மணி வரை சென்று சுவாமி தரிசனம் செய்து தருவது நல்லது. 100க்கு 80 சதவீதம் முன்னேற்றம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+