Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாத ராசி பலன் 2022: கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கெட்டில் பணம் நிறையும்

தை மாதம் கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும், சேமிப்பும் உயரப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னி பிறந்தவர்களுக்கு முக்கியமான கிரகங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானத்தில் கூடியுள்ள மூன்று கிரகங்களால் தை மாதத்தில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு தை மாத ராசி பலன் எப்படி இருக்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.

மன மகிழ்ச்சி அதிகரிக்கும்

மன மகிழ்ச்சி அதிகரிக்கும்

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது,நான்காம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சனி, சூரியன், புதன், ஆறாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன.
பூர்வ புண்ணியம் வலுவடைந்துள்ளது. எல்லாவிதமான நன்மைகள் நடைபெறப்போகிறது. லக்னாதிபதி புதனோடு சேர்ந்து முக்கிய கிரகங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இணைந்துள்ளன. மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். கடன் பிரச்சினை நீங்கும்.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

இந்த மாதம் வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு கிரகப்பிரவேஷம் செய்ய ஏற்ற மாதம். புது வீடு கட்ட வாஸ்து செய்யவும் நல்ல மாதம். மன திருப்தி ஏற்படும். காதல் கை கூடி வரும். திருமணம் சுப காரியம் கை கூடி வரும் சந்தோஷமான விசயங்கள் அதிகம் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். கவனமாக முதலீடு செய்வது நல்லது. குழந்தை பாக்கியம் கை கூடி வரும். இல்லத்தரசிகளுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். தாய்மாமன் மூலம் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளால் இதுநாள் வரை இருந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறும். நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக தை மாதம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நாள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

பண வரவு அதிகரிக்கும்

பண வரவு அதிகரிக்கும்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது,மூன்றாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய் நான்காம் வீட்டில் சனி, சூரியன், புதன்,ஐந்தாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது பெண்கள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். தந்தை வழி சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை நடைபெறும். திடீர் திருமண யோகம் வரும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

வேலையில் இருப்பவர்கள் இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் உண்டாகும். சம்பள உயர்வு அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பெண்களுக்கு திருப்திகரமான மாதம். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கலாம் செலவுகள் அதிகரிக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் இணைந்திருப்பதால் காது மூக்கு தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை. செழிப்பான மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் ரத சப்தமி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். விநாயகர் வழிபாடு வெற்றியைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+