பொங்கல் நாளில் அர்த்தகேந்திர யோகத்தால்.. ஜாக்பாட் அடிக்கும் மூன்று ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. பல புதிய நம்பிக்கைகளுடன் நாளை தை மாதத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அதனால் பலர் தை மாதம் வரை காத்திருந்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். இந்தப் பதிவில் அர்த்தகேந்திர யோகத்தால் பலனடையவுள்ள 3 ராசிகள் குறித்து பார்க்கவுள்ளோம்.

ஒன்பது கிரகங்களில் குரு மற்றும் செவ்வாய் கிரகங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். செல்வம், அறிவு, பொறுமை, திருமணம், குழந்தை ஆகிய பலன்களுக்கு குரு அதிபதி. செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை தைரியம், வீரம், தன்னம்பிக்கை, துணிவு ஆகியவற்றுக்கு அதிபதியாவார். அதன் காரணமாக இந்த கிரகங்களில் ஏற்படும் மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

pongal ardhakendram

12 ராசிகளிலுமே அதன் எதிரொலி இருக்கும். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (14.1.2025) குரு மற்றும் செவ்வாய் கிரகங்கள் அர்த்தகேந்திர யோகத்தால் நன்மை தரவுள்ளார்கள். வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே தெரியவில்லை என்று வருத்தத்தில் உள்ள ராசிகளுக்கு கூட சட்டென்று அதிர்ஷ்ட காற்று வீசி பலன்கள் கொட்டும். அதிலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.


கன்னி: அர்த்தகேந்திர யோகத்தால் கன்னி ராசி மிகப்பெரியளவு பயனடைய போகிறது. கஷ்டங்கள் சுக்குநூறாகி அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறீர்கள். நெடு நாட்களாக தடங்கலில் இருந்த வேலைகள் கூட தற்போது வெற்றிகரமாக முடியும். தொட்டது துலங்கும். எதிலும் வெற்றி கிடைப்பது உறுதி. உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடையும். சமூகத்தின் உங்கள் பேச்சுக்கு அந்தஸ்து கிடைக்கும்.

தொழிலில் பணிகள் அதிகரித்தாலும் அதற்குண்டான பணிகள் நிச்சயம் கிடைக்கும். வியாபார விருத்தி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முழு ஆதரவால் சிறப்பான பலன்களை அடைவீர்கள். தாய், தந்தை பரம்பரை சொத்துகளால் பயனடைவீர்கள். உடல்நலக் குறைபாடுகள் நீங்கி தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்கு இதுவரை தடைபட்ட யோகங்கள் எல்லாம் இந்த அர்த்தகேந்திர யோகத்தால் அடுத்தடுத்து உங்கள் வீட்டு கதவை தட்டும். பயணம் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஆதாயமும் ஏற்படும். இதற்கு முன்பு எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லை, வரவை விட செலவு அதிகமாக உள்ளது என்று வருத்தப்பட்டிருப்பீர்கள். இனி அந்த கவலை இல்லை. மனம் நிறைவாகுமளவுக்கு சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

உத்யோகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும். குருவின் பார்வையால் புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். தொழிலிலும் சிறப்பான வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்: கடின உழைப்பை செலுத்தியும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கும்பம் ராசியினர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்திருப்பார்கள். இனி அந்த கவலை தேவையில்லை. அர்த்தகேந்திர யோகத்தால் உங்கள் கடின உழைப்புக்கான பலன்களை கைமேல் அனுபவிக்க போகிறீர்கள். தொழிலில் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

வேலை தேடியவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நிறைவான சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் தாயின் உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+