திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா - ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் ஆலய நிர்வாக அதிகாரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருநள்ளாறு தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா கூறியதாவது வரும் டிசம்பர் 27-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் சேர்ந்த பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறிய ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, சனிப்பெயர்ச்சி முந்தைய வாரம் முதல் சனிப்பெயர்ச்சி தொடர்ந்து 4 வாரம் என ஆறு வாரங்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் வரும் பக்தர்கள் அனைவரும் வெப்பமானி பரிசோதனைக்கு பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அறிகுறிகளுடன் வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்தார்.
நளன் தீர்த்த குளத்தில் புனித நீராட அனுமதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications