Rasi Palan This Week: ராஜா பகவத்தாக மாறும் துலாம் ராசி.. மூட்டையில் பணத்தை அள்ளும் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நீசபங்க ராஜயோகம் செயல்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எல்லா காரியங்களிலும் ஜெயம் ஏற்படும். பண வரவுகளில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தொலை தூரத்தில் இருந்து குட் நியூஸ்கள் தேடி வரும். உடற்பயிற்சியைத் தவிர்க்காமல் இருப்பது நல்லது. உள்ளூர், வெளியூர், சொந்த ஊர்களுக்குச் செல்லும் யோகம் உண்டாகும்.
மகிழ்ச்சி
வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் இருந்த மனக் கஷ்டங்கள், மன சங்கடங்கள் படிப்படியாக குறையும்.
குட் நியூஸ்
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம் ரீதியாக அற்புதமான அனுகூலங்கள் ஏற்படும். அரசாங்கத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருப்பது மிக மிக முக்கியம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்துக் காரியங்களும் இனி டக்கு டக்கென்று நடக்கும்.
யோக பலன்கள்
இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். யோக பலன்கள் அதிகமாக கிடைக்க அனுமன் வழிபாடு முக்கியம். வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வாகனங்களால் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு செலவுகள், சிறு சிறு சங்கடங்கள் ஐப்பசி மாதத்தில் எல்லா ஆண்டுகளிலும் ஏற்படும்.
வழிபாடு
வைகாசி மாதத்திலும் சிறு சிறு பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். அனுமன் சாலிஷா கேட்பது பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். சுவாதி நட்சத்திரம் இருக்கக் கூடிய ராசி என்பதால் நரசிம்மர் கவசம் கேட்பது, மந்திரத்தை ஜெபிப்பது மிகவும் நல்லது. நரம்பு, மன அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அனுமன் வழிபாடு வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தை தரும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications