Rasi Palan This Week: துலாம் ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் 3 அபாயங்கள்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லாவற்றிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். சூரியன் உங்கள் ராசியில் இருக்கிறார். சுக்கிரனும் நீட்சமாக இருக்கிறார். கூடவே செவ்வாய் பகவானும் இருக்கிறார். அதேநேரத்தில் சுப பலன்கள் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். ரத்த பந்த உறவில் இருந்த பிரச்சனைகள் விலகும். தாய், தந்தை வழி உறவு இணக்கமாகும். முதலீடுகளில் லாபம் வந்து சேரும்.
பயணம்
தொழில், வியாபாரத்தில் ஏற்றம் கிடைக்கும். உத்யோகத்திலும் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் கடினமான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் விலகும். சமூகத்தின் உங்களின் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்வீர்கள்.
கவனம்
வண்டி வாகனம் இயக்கும்போது கவனம் அவசியம். கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்பாலினத்தவர் விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்திலும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையிடம் வீண் விவாதத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எதிலும் நிதானத்தை கடைபிடிக்காவிடின் சிரமம் ஏற்படும். ஆரோக்கியத்திலும் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். முதுகு. நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்
உத்யோகத்தில் உயரதிகாரிகள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அரசுத்துறை, அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது. சட்ட விரோத சமச்சாரங்கள் பக்கம் எட்டியே பார்க்க கூடாது. உங்கள் வீட்டின் அருகே உள்ள கற்பக விநாயகர் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
