Thulam Rasi Palan: துலாம் ராசி பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. நண்பர்கள் விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும் மாதமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால், உங்களுக்கு இருக்கும் நோயை வெளிப்படுத்திக் காட்டி, அதனை குணப்படுத்தும் அமைப்பு உள்ளது. 6க்கு உடைய குரு 9 ஆம் இடத்தில் இருப்பதால் நோயை குணமாக்கும்.
நற்பெயர்
சுக ஸ்தானத்தில் 4 கிரகங்கள் உள்ளன. உங்கள் லாபாதிபதி, சப்தமாதிபதி, ராசியாதிபதி என 4 கிரகங்கள் உள்ளன. தாயுடைய வழிகாட்டுதல்கள், அன்பு அபரிமிதமாக கிடைக்கும். தாயினால் முன்னேறும் யோகமும், நற்பெயர் பெறும் யோகமும் உண்டாகும். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடு வாங்கும் செய்தி உங்களுக்கு வரும். நீங்களும் வீடு வாங்க வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படும்.
குட்நியூஸ்
குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடி வரும். செவ்வாய், சுக்கிரனுடைய இணைவால் நல்ல முறையில் திருமணம் தொடர்பான செய்திகள் தேடி வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவீர்கள். படிக்கும் மாணவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.
கவனம்
நண்பர்களுடன் வெளியூர், வெளியிடத்தில் தங்கும்போது, பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடும் போது மிகுந்த கவனம் தேவை. இளம் பெண்கள் தங்களுடைய ஆண் நண்பர்களுடன் மாலை நேரத்தில் ஆண வெளியில் செல்லும்போது பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். தவறான பொழுதுபோக்குகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
புத்திர பாக்கியம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதால் தொழில் ரீதியாக பெரிய வெற்றியைக் கொடுக்கும் அமைப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்ப்பதை விட பெரிய வெற்றிகள் வந்து சேரும். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
வழிபாடு
தேவையில்லாத எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் கவலை கொள்ளத் தேவையில்லை. கண்டிப்பாக உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. இந்த காலகட்டத்தில் நரசிம்மர் வழிபாடு, கந்தக்கோட்டம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகச் சிறந்த நன்மைகளைக் கொடுக்கும்.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications