Masi Matha Palan: துலாம் ராசிக்கு ராஜயோகம்.. மாசியில் கொட்டும் அற்புதமான அதிர்ஷ்டம்
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு (Thulam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானம் பலமாக உள்ளது. இரட்டைக் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளுக்கு ராஜயோகம் கிடைக்கும். தலைவர் பதவிகள் கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு பெரிய ஊரில், வெளியூரில், வெளிநாட்டில் கிடைக்கும் யோகம் உண்டு. பதவிகள் தானாகத் தேடி வரும். நினைத்த காரியங்கள் கைகூடும்.
தொட்டது துலங்கும்
எல்லாமே நீங்கள் நினைத்த மாதிரியான விஷயங்கள் நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். எதிரித் தன்மை காணாமல் போகும். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறும் சூழல் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். காதல் கைகூடும். மன வாழ்க்கை இனிக்கும்.
ஏற்றம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும் அற்புதமான காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். துணை மற்றும், குடும்பத்தினருடன் இணக்கமாகச் செல்வது நல்லது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். பதவி, பெயர், புகழ் போன்றவை ஏற்படும். முதலீடுகள் செய்து மகிழ்வீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
லாபம் கொட்டும்
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லம் படிப்படியாக மாறும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். யோகம், சந்தோஷம், அனுகூலம், லாபம் ஏற்படக்கூடிய அற்புதமான நேரம் இது. பூர்வ புண்ணிய தோஷம் இருப்பதால் அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மை பயக்கும். மற்றபடி அனைத்து விஷயங்களிலும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வரன்கள் அமையும். எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும் காலகட்டம். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். மாசி மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டக்கூடிய யோகம் உண்டு. தைரியம், தன்னம்பிக்கை உயரும். லட்சுமி நரசிங்கப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications